நான் அறிந்திருக்கிறேன் 60-0417S 1. நாம் இக்காலையில் இங்கிருப்பதற்கு, மற்றொரு மகத்தான ஈஸ்டரின் நேரத்தைக் காணும்படியாக இந்தப் பூமியின் மேல் ஜீவிப்பதற்கு நிச்சயமாகவே ஒரு சிலாக்கியமடைந்துள்ள ஜனங்களாகவேயிருக்கிறோம். ஈஸ்டரானது எப்பொழுதுமே நமக்கு அப்பேற்பட்ட ஒரு—ஒரு மகிமையான காரியத்தையும், புதிய நம்பிக்கைகளையுமே கொண்டு வருகிறது. எவ்வளவு அற்புதமானது! 2 நான் இக்காலையில் அங்கே பின்னால் உள்ள அந்த அறைக்கு நடந்து சென்றபோது, யாரோ ஒருவர் என்னை சந்தித்து, “சகோதரன் பிரான்ஹாம், கடந்த வருடம் சாட்டக்குவா (Chautauqua) என்ற இடத்தில் சிறு பிள்ளைக்கு இல்லை சிறு குழந்தைக்கு அல்லது யாரோ ஒருவருக்கு ஜெபிக்கப்பட்டதை நீர் அறிவீர், அதாவது அதற்கு அதனுடைய இருதயத்தின் அடைப்பிதழ்கள் (values) அகற்றப்பட்டு அல்லது ஏதோ ஒன்று அதன்மீது பொருத்தப்பட்டது” என்றார். மேலும் அவர் தொடர்ந்து, “அந்தக் குழந்தை சுகமடைந்து விட்டது. அது இக்காலையில் இந்தக் கட்டத்தில் உள்ளது. அது இக்காலை இங்கே அமர்ந்து கொண்டிருக்கிறது” என்று கூறினார். எனவே அது அருமையாயுள்ளது. நாம் மற்றொரு ஆராதனையை துவங்குவதற்கு முன்னரே நாம் ஒருக்கால் அந்த சிறு சாட்சியைக் கேட்கலாம். நாம் ஒரு மகிழ்ச்சியான ஜனங்களாயிருக்கிறோம். 3 இப்பொழுது, நீங்கள் உயிர்த்தெழுதலைக் குறித்த வேதப் பகுதியை ஏற்கனவே வாசித்திருக்கவில்லையென்றால், நான் சகோதரன் நெவில் அவர்களிடம் உயிர்த்தெழுதலைக் குறித்த வேத வாசிப்பை மத்தேயுவிலிருந்தோ அல்லது லூக்காவிலிருந்தோ வாசிப்பாரா என்று கேட்கவுள்ளேன். சகோதரனே நீங்கள் வாசித்துவிட்டீர்களா? [சகோதரன் நெவில், “இல்லை” என்று கூறுகிறார்.—ஆசி.] எனவே நாம் ஜெபத்திற்காக ஆயத்தமாகிக் கொண்டிருக்கையில்… 4 இப்பொழுது இந்த ஆராதனையைத் தொடர்ந்து சுகமளிக்கும் ஆராதனையும் நடைபெற உள்ளது. இந்த ஆராதனை முடிவுற்ற பிறகு, நீங்கள் உங்களுடைய காலைச் சிற்றுண்டியை அருந்தச் செல்லலாம். அதன்பின்னர், நாங்கள் மீண்டும் ஒன்பது முப்பது மணிக்கு திரும்ப வந்து, மற்றொரு ஆராதனையை துவங்குவோம். அதன்பின்னர் அதனைத் தொடர்ந்து சுகமளிக்கும் ஆராதனைகளும் நடைபெறும். அதன்பின்னர் அதனைத் தொடர்ந்து ஞானஸ்நான ஆராதனைகளும் நடைபெறும். 5 இது ஞானஸ்நானத்திற்கு என்ன ஓர் அழகான நேரமாய் உள்ளது. ஓ, என்னே! உயிர்த்தெழுதல், அந்தக் காரணத்தினால் தான் நாம் ஞானஸ்நானம்பண்ணப்படுகிறோம், ஏனென்றால் அவர் மீண்டும் உயிர்த்தெழுந்துவிட்டார். 6 நாம் இங்கே நம்முடைய ஞானஸ்நானத் தொட்டியை அமைப்பதற்கு முன்னர், நாம் வழக்கமாக ஜனங்களை அதிகாலை வேளைகளில் வெண்பனியால் மூடப்பட்ட குளிர் மிகுந்த ஆற்றண்டை அழைத்துச் சென்று, அங்கே அந்த ஆற்றண்டையிலேயே அவர்களுக்கு ஞானஸ்நானம் கொடுத்ததை நினைத்துப் பார்க்கிறேன். அது ஒரு புனிதமான நேரமாய் உள்ளபடியால் அதனைக் குறித்த ஏதோ ஒரு காரியம் உண்டு. ஈஸ்டர், ஒரு மகத்தான நேரமாயுள்ளது. நான் சகோதரன் பேட் டெய்லர் (Pay Tyler) இங்கே அமர்ந்திருப்பதைப் பார்த்துக்கொண்டிருந்தேன். 7 கடந்த இரவு நான் யாரோ ஒருவரிடத்தில் பேசிக் கொண்டிருந்தேன். அதாவது ஓக்லஹாமாவில் நடைபெற்ற நம்முடைய கடந்த கூட்டத்திலேயே நான் இதைச் செய்ய முயன்றேன். (நான் இதை அறிவுக்கவுள்ளேன்) அதாவது என்னுடையப் பழைய பகுத்தறிதலின் ஊழியத்தை செய்யும்படி தேவன் என்னை அழைக்கும் வரையில் நான் அதை இப்பொழுது ஒருபுறம் தள்ளிவைக்க முயற்சித்துக் கொண்டிருக்கிறேன், ஏனென்றால் புதிய ஊழியம் வந்து கொண்டிருப்பதை, ஆரம்பித்துள்ளதை நான் எண்ணிப் பார்க்கிறேன். 8 அன்றொரு இரவு அதைக் குறித்து எவருமே அறிந்திருக்கவில்லை. குருடாகப் பிறந்திருந்த ஒரு குழந்தை, ஒரு பையன் முற்றிலும் குருடாய், சுமார் ஆறு வயது நிரம்பிய ஒரு பையன் மேடையின் மேல் வந்தபோது, நான் அதைப் பரிசோதித்துப் பார்த்தேன். அப்பொழுது அவன் அப்படியே உடனடியாக, “சகோதரன் பிரான்ஹாம், என்னால் காண முடிகிறது” என்று கூச்சலிட்டான். அவனுடைய ஜீவியத்திலேயே முதன்முறையாக அவனுடைய கண்கள் திறக்கப்பட்டபோது, அந்தப் பையனுக்கு அருகில் அங்கே சகோதரன் பேட் டெய்லர் அவர்கள் நின்று கொண்டிருந்தார். எனவே நீங்கள் இங்கே என்னோடுகூட மகத்தான எதிர்ப்பார்த்தல்களோடு இருக்கின்றீர்கள் என்றே நான் நம்புகிறேன். நமக்காக தேவன் ஏதோ ஒரு காரியத்தை செய்யும்படியாகவும், நாம் ஏற்கனவே இருந்து வருகிறதைப் பார்க்கிலும் மற்றொரு உயர்ந்த மட்டத்திற்கு நம்மை கொண்டு வருகிறார் என்றும் நான் எதிர்நோக்கிக் கொண்டிருக்கிறேன். இப்பொழுது நாம் ஜெபத்திற்காக நம்முடைய தலைகலைத் தாழ்த்துவோமாக. 9 எங்களுடைய கிருபையுள்ள பரலோகப் பிதாவே, நாங்கள் இக்காலையில் இங்கே சாலையின் ஓரத்தில் உள்ள இந்த சிறு சபையில் கூடிவந்திருக்கையில் எங்கள் மனதுட் கொண்டிருக்கிற இவை எல்லாவற்றிற்காகவும் விசேஷமாக இந்த ஈஸ்டர் காலையில் நாங்கள் உண்மையிலேயே உமக்கு நன்றியுள்ளவர்களாயிருக்கிறோம். ஈஸ்டர் என்ற ஒன்று இல்லாதிருந்தால், நாங்கள் இன்றைக்கு இந்த நிலையில் இருந்திருக்கவேமாட்டோம். ஆனால் ஈஸ்டர் என்பதோ தேவனுடைய வாக்குத்தத்தங்களையெல்லாம் முத்திரையிட்டிருந்ததாயிருக்கிறது. அது அவைகளை எங்களுக்கு உறுதிப்படுத்திவிட்டது. அவர் வாக்களித்திருந்த ஒவ்வொரு காரியமும் ஈஸ்டரிலே உண்மையாக்கப்பட்டது. வருடத்தில் எங்களுக்கு உண்டாயிருக்கிற மகத்தான கொண்டாட்டமான நாட்களில் இது ஒன்றாயுள்ளது. கர்த்தாவே இன்றைக்கு நாங்கள் அமர்ந்து, பரிசுத்த ஆவிக்கான எதிர்பார்த்தலின் கீழ் காத்திருக்கையில், ஈஸ்டருக்குப் பிறகு வந்த பரிசுத்த ஆவியானவரே எங்கள் இருதயத்தின் மேல் வந்து, எங்களைத் தேற்றி, மகத்தான வல்லமையுள்ள அளவுகளில் எங்கள் விசுவாசத்தை திரும்ப அளித்து, இயேசுவானவர் நாங்கள் நடக்கும்படி நியமித்திருக்கிற அந்த ஜீவியத்தில் நாங்கள் நடக்கும்படிக்கு நீர் எங்களுடைய இருதயங்களைத் தேற்ற வேண்டும் என்று நாங்கள் வேண்டிக்கொள்ள மனதாயிருக்கிறோம். 10 நாங்கள் ஒவ்வொருவருக்காகவும், தனிப்பட்ட நபராயுள்ள ஒவ்வொருவருக்காகவும், விசேஷமாக வீட்டை விட்டகலமுடியாத பிணியாளிகளுக்காகவும், இன்றைக்கு எங்குமே ஆராதனைகளில் சென்று கலந்து கொள்ள முடியாதவர்களுக்காகவும் ஜெபிக்கிறோம். தேவனே அவர்களோடிரும். இந்த ஈஸ்டரானது அவர்கள் படுக்கையிலிருந்து எழுந்து, ஜீவியத்தில் இதற்கு முன்பு அவர்கள் ஒருபோதும் அறிந்திராத ஒரு புதிய ஆரோக்கியத்தைக் கண்டறியும் ஓர் உண்மையான ஈஸ்டராக இது இருப்பதாக. கர்த்தாவே இதை அருளும். 11 ஒவ்வொரு பிரசங்கியாரும் இன்றைக்கு உலகத்தைச் சுற்றிலும் நீர் கொண்டுள்ள ஒவ்வொரு ஊழியக்காரனும், இந்த மகத்தான நினைவுக்கூருதலைக் கொண்டாடிக் கொண்டிருக்கிற ஒவ்வொருவரும் தேவன் தம்முடைய ஜனங்களுக்காக சேமித்து வைத்துள்ள ஆகாரத்தை (காத்திருக்கும் ஆடுகளுக்கு) தங்களுடைய சபையோர்களுக்கு கொண்டுவரும்படியான அபிஷேகத்தையும், பெலனையும், வல்லமையையும் பெற்றுக் கொள்வார்களாக. கர்த்தாவே இதை அருளும். நாங்கள் எங்களுடைய பங்கிற்காக தாழ்மையாய் கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் காத்திருக்கிறோம். ஆமென். 12 நான் இப்பொழுது உயிர்த்தெழுதலுக்கான வேத வாக்கியங்களை சகோதரன் நெவில் அவர்கள் வாசிக்கும்படி கூறப்போகிறேன். [சகோதரன் நெவில், “மத்தேயு 28” என்று கூறி பின்வரும் வேதப் பகுதியை வாசிக்கிறார்.—ஆசி.] [ஓய்வுநாள் முடிந்து வாரத்தின் முதலாம் நாள் விடிந்து வருகையில், மகதலேனா மரியாளும் மற்ற மரியாளும் கல்லறையைப் பார்க்கவந்தார்கள்.] [அப்பொழுது, பூமி மிகவும் அதிரும்பம்படி, கர்த்தருடைய தூதன் வானத்திலிருந்திறங்கிவந்து, வாசலிலிருந்த கல்லைப் புரட்டித் தள்ளி, அதின்மேல் உட்கார்ந்தான்.] [அவனுடைய ரூபம் மின்னல்போலவும், அவனுடைய வஸ்திரம் உறைந்த மழையைப்போல வெண்மையாகவும் இருந்தது.] [காவலாளர் அவனுக்குப் பயந்ததினால் திடுக்கிட்டுச் செத்தவர்கள்போலானார்கள்.] [தூதன் அந்த ஸ்திரீகளை நோக்கி: நீங்கள் பயப்படாதிருங்கள்; சிலுவையில் அறையப்பட்ட இயேசுவைத் தேடுகிறீர்கள் என்று அறிவேன்.] [அவர் இங்கே இல்லை; தாம் சொன்னபடியே உயிர்த்தெழுந்தார்; கர்த்தரை வைத்த இடத்தை வந்து பாருங்கள்;] [சீக்கிரமாய்ப் போய், அவர் மரித்தோரிலிருந்து எழுந்தார் என்று அவருடைய சீஷர்களுக்குச் சொல்லுங்கள். அவர் உங்களுக்குமுன்னே கலிலேயாவுக்குப் போகிறார். அங்கே அவரைக் காண்பீர்கள்; இதோ, உங்களுக்குச் சொன்னேன் என்றான்.] [அவர்கள் பயத்தோடும், மகா சந்தோஷத்தோடும் கல்லறையை விட்டுச் சீக்கிரமாய் புறப்பட்டு, அவருடைய சீஷர்களுக்கு அறிவிக்க ஓடினார்கள்.] [அவர்கள் அவருடைய சீஷர்களுக்கு அறிவிக்கப்போகிறபோது, இயேசு தாமே அவர்களுக்கு எதிர்ப்பட்டு; வாழ்க என்றார். அவர்கள் கிட்டவந்து, அவர் பாதங்களைத் தழுவி, அவரைப் பணிந்துகொண்டார்கள்.] [அப்பொழுது இயேசு அவர்களை நோக்கி: பயப்படாதிருங்கள்; நீங்கள் போய், என் சகோதரர் கலிலேயாவுக்குப் போகும்படி அவர்களுக்குச் சொல்லுங்கள்; அங்கே அவர்கள் என்னைக் காண்பார்கள் என்றார்.] [அவர்கள் போகையில், காவல்சேவகரில் சிலர் நகரத்துக்குள்ளே வந்து, நடந்த யாவற்றையும் பிரதான ஆசாரியருக்கு அறிவித்தார்கள்.] [இவர்கள் மூப்பரோடே கூடிவந்து, ஆலோசனைபண்ணி, சேவகருக்கு வேண்டிய பணத்தைக் கொடுத்து:] [நாங்கள் நித்திரைபண்ணுகையில், அவனுடைய சீஷர்கள் இராத்திரியிலே வந்து, அவனை களவாய்க் கொண்டுபோய் விட்டார்கள் என்று சொல்லுங்கள்.] [இது தேசாதிபதிக்குக் கேள்வியானால், நாங்கள் அவரைச் சம்மதப்படுத்தி, உங்களைத் தப்புவிப்போம் என்றார்கள்.] [அவர்கள் பணத்தை வாங்கிக்கொண்டு, தங்களுக்குப் போதிக்கப்பட்டபடியே செய்தார்கள். இந்தப் பேச்சு யூதர்களுக்குள்ளே இந்நாள்வரைக்கும் பிரசித்தமாயிருக்கிறது.] [பதினொரு சீஷர்களும், கலிலேயாவிலே இயேசு தங்களுக்குக் குறித்திருந்த மலைக்குப் போனார்கள்.] [அங்கே அவர்கள் அவரைக் கண்டு, பணிந்து கொண்டார்கள். சிலரோ சந்தேகப்பட்டார்கள்.] [அப்பொழுது இயேசு சமீபத்தில் வந்து, அவர்களை நோக்கி: வானத்திலும், பூமியிலும் சகல அதிகாரமும் எனக்குக் கொடுக்கப்பட்டிருக்கிறது.] [ஆகையால், நீங்கள் புறப்பட்டுப்போய், சகல ஜாதிகளையும் சீஷராக்கி, பிதா குமாரன் பரிசுத்த ஆவியின் நாமத்திலே அவர்களுக்கு ஞானஸ்நானங்கொடுத்து,] [நான் உங்களுக்குக் கட்டளையிட்ட யாவையும் அவர்கள் கைக்கொள்ளும்படி அவர்களுக்கு உபதேசம்பண்ணுங்கள். இதோ, உலகத்தின் முடிவுபரியந்தம் சகல நாட்களிலும் நான் உங்களுடனேகூட இருக்கிறேன் என்றார். ஆமென்.] [ஒலிநாடாவில் காலி இடம்—ஆசி.] 13 …அவருடைய வார்த்தையின் வாசிப்பதற்கு தம்முடைய ஆசீர்வாதங்களைக் கூட்டுவாராக. 14 இப்பொழுது நாங்கள் காலைக்கான அந்த ஆராதனைகளை மீண்டும் அறிவிக்க விரும்புகிறோம். இப்பொழுது இந்த காலை ஆராதனை, நாம் இதிலிருந்து…உடனடியாக…ஒன்பது முப்பது மணிக்குத் துவங்கும். ஆகையால் நாம் இதை நம்முடைய சூரியோதய ஆராதனை என்று அழைக்கிறோம். நடந்து முடிந்துபோன கூட்டங்களைக் குறித்த சில மகத்தான காரியங்களின் அறிக்கையை நாங்கள் உங்களுக்கு கூறவிருக்கிறோம். வியாதியாயும், துன்ப்பப்படுகிறவர்களுமாயிருக்கிற நீங்கள் யாவரும் இந்தக் காலையில் இந்த உயிர்த்தெழுந்த இயேசுவானவர் இன்றைக்கும் ஜீவிக்கிறார் என்றும், அவர் எப்போதும் இருந்தவிதமாகவே அப்படியே மாறாதிருக்கிறார் என்றும் விசுவாசிக்கும்படியான விசுவாசத்தோடு வரவேண்டுமென்று நாங்கள் விரும்புகிறோம். அவர் கொஞ்சமும் மாறியிருக்கவே இல்லை. 15 இப்பொழுது நான் யோபுவின் புத்தகம் 19-ம் அதிகாரத்தில் கண்டறிந்த ஒரு சிறு வேதப்பகுதியை 15-வது வசனத்திலிருந்து துவங்கி வாசிக்க விரும்புகிறேன். என் வீட்டு ஜனங்களும், என் வேலைக்காரிகளும் என்னை அந்நியனாக எண்ணுகிறார்கள்; அவர்கள் பார்வைக்கு நான் பரதேசியானேன். நான் என் வேலைக்காரனைக் கூப்பிடுகிறபோது அவன் எனக்கு உத்தரவுகொடான்; என் வாயினால் நான் அவனைக் கெஞ்சவேண்டியதாயிற்று. என் சுவாசம் என் மனைவிக்கு வேறுபட்டிருக்கிறது; என் கர்ப்பத்தின் பிள்ளைகளுக்காகப் பரிதபிக்கிறேன். சிறுபிள்ளைகளும் என்னை அசட்டைபண்ணுகிறார்கள்; நான் எழுந்தால், அவர்கள் எனக்கு விரோதமாய்ப் பேசுகிறார்கள். என் பிராணசிநேகிதர் எல்லாரும் என்னை வெறுக்கிறார்கள்; நான் சிநேகித்தவர்கள் எனக்கு விரோதிகளானார்கள். என் எலும்புகள் என் தோலோடும் என் மாம்சத்தோடும் ஒட்டிக் கொண்டிருக்கிறது; என் பற்களை மூடக் கொஞ்சம் தோல் மாத்திரம் தப்பினது. என் சிநேகிதரே, எனக்கு இரங்குங்கள், எனக்கு இரங்குங்கள்; தேவனுடைய கை என்னைத் தொட்டது. தேவனைப்போல நீங்களும் என்னைத் துன்பப்படுத்துவானேன்? என் மாம்சம் பட்சிக்கப்பட்டாலும் நீங்கள் திருப்தியற்றிருக்கிறதென்ன? ஆ, நான் இப்பொழுது சொல்லும் வார்த்தைகள் எழுதப்பட்டால் நலமாயிருக்கும்; அவைகள் ஒரு புஸ்தகத்தில் வரையப்பட்டு, அல்லது என்றைக்கும் நிலைக்க அவைகள் கருங்கல்லிலே உளிவெட்டாகவும், ஈய எழுத்தாகவும் பதிந்தால் நலமாயிருக்கும். என் மீட்பர் உயிரோடிருக்கிறார் என்றும், அவர் கடைசி நாளில் பூமியின் மேல் நிற்பார் என்றும் நான் அறிந்திருக்கிறேன். இந்த என் தோல்முதலானவை அழுகிப்போனபின்பு, நான் என் மாம்சத்தில் இருந்து தேவனைப் பார்ப்பேன். அவரை நானே பார்ப்பேன். அந்நிய கண்கள் அல்ல, என் கண்களே அவரைக் காணும்; இந்த வாஞ்சையால் என் உள்ளிந்திரியங்கள் எனக்குள் சோர்ந்துபோகிறது. 16 இந்த யோபு 19ம் அதிகாரத்தில் கண்டதை, அங்கேயிருந்து ஒரு பாடத்தை எடுக்க நான் விரும்புகிறேன். நான் அறிந்திருக்கிறேன். 17 கோத்திரத்தலைவன் இந்த நேரத்தில் ஏறக்குறைய நாம் இன்றைக்கு உள்ளது போன்றே இருந்தான். அவன் கடுங் சிக்கலான தொல்லைகளில் இருந்து வந்தான். நாம் அதை “தலைக்கு மேலே செல்லும் வெள்ளம்” என்றே அழைக்கிறோம். அவன் பதற்றம் கொண்டிருந்தான். எனவே அவன் சாம்பல் குவியலில் அநேக நாட்களாக அமர்ந்து தன்னை ஆற்றும்படியான வார்த்தைகளைக் கண்டறிய முயற்சித்துக் கொண்டிருந்தான். அவனுக்கு தைரியத்தை அளிக்கக்கூடிய ஏதோ ஒன்றைக் கண்டறிய முயற்சித்துக் கொண்டிருந்தான். அவன் தன்னுடைய ஜீவியம் அவனிடத்திலிருந்து வாடி வதங்குவதைக் கண்டபோது, அவனுக்கு ஓர் ஆறுதலாக இருக்கும்படியான ஏதோ ஒன்றைக் கண்டறியவே முயற்சித்துக் கொண்டிருந்தான். 18 முதலாவது அவன் ஒரு வயோதிக மனிதனாய், ஏறக்குறைய தொண்ணூறு வயதுடையவனாயிருந்தான், அவன் தேவனுடைய கரத்தினால் வாதிக்கப்பட்டிருந்தான். இப்பொழுது தேவன் தம்முடைய கரத்தினால் அவனைத் தொடவில்லையென்றும், ஆனால் தேவன் அவனை சாத்தான் தொடும்படி அனுமதித்திருந்தார் என்பதையும் நாம் அறிவோம். தேவன் இந்தக் காரியங்களைச் செய்ய பிரதிநிதிகளை மட்டுமே உடையவராயிருக்கிறார். தேவன் பொல்லாங்கு செய்யப்பட வேண்டுமென்று விரும்புகிறார். எனவே அவர் அதைச் செய்ய சாத்தானை அவிழ்த்துவிடுகிறார். அவர் நன்மை செய்யப்பட விரும்பாராயின், அப்பொழுது அவர் அதைச் செய்யும்படி அவிழ்த்துவிட தம்முடைய ஊழியக்காரர்களை உடையவராயிருக்கிறார். 19 சாத்தான் யோபுவை சோதிக்கும்படியான ஒரு நோக்கத்திற்காகவே அவனைத் தொட்டிருந்தான், ஏனென்றால் அவனுக்கும், தேவனுக்கும் இடையே ஒரு விவாதம் உண்டாயிருந்தது. தேவன் சாத்தானிடத்தில், “பூமியிலே எனக்கு ஒரு தாசன் உண்டு. அவனைப்போல ஒருவனும் இல்லை. நான் என்னவெல்லாம் அவனிடத்தில் கூறுகிறேனோ, அவன் அதைச் செய்வான், அவன் ஒரு உத்தமமான மனிதனாயும், நீதிமானாயும் இருக்கிறான்” என்று கூறினார். 20 அப்பொழுது சாத்தான், “நீர் என்னை அவனைத் தொடும்படி அனுமதிப்பீரானால், அப்பொழுது நான் அவனை உம்முடைய முகத்திற்கு முன்பாக தூஷிக்கச் செய்வேன்” என்றான். 21 சம்பவித்துக் கொண்டிருந்த இந்தக் காரியங்கள் எல்லாவற்றையுமே யோபு அறியாமலிருந்தான். இந்த சம்பவங்கள் கோத்திரத்தலைவனை ஓர் ஆழ்ந்த மனோ துக்கத்திற்குள் கொண்டு வந்தது. அதே சமயத்தில் எல்லாமே அவனை விட்டுப் போய்விட்டபோதும், எப்படியோ அவன் கிறிஸ்துவுக்குள்ளாகத் தன்னுடைய ஸ்தானத்தை அப்படியே பராமரித்து வந்தான். எனவே அவன், “ என் மீட்பர் உயிரோடிருக்கிறார் என்று நான் அறிந்திருக்கிறேன்” என்றான். 22 இப்பொழுது நாம் அந்த இடங்களுக்கே வந்திருக்கிறோம். நாம் யாவருமே வந்திருக்கிறோம். நாம் இங்கே அதே விதமான ஒரே நோக்கத்திற்காகவே, இன்றைக்கு கூட்டப்பட்டிருக்கிறோம் என்றே நான் விசுவாசிக்கிறேன். நாம் யாவருமே சாம்பல் குவியல்களின் மேலேயே இருக்கிறோம். நாம் நம்முடைய தொல்லைகளையும், நம்முடைய இன்ப துன்பங்களையும், நம்முடைய—நம்முடைய மோசமான நேரங்களையும், நம்முடைய சுகவீனங்களையும், நம்முடைய மன வேதனைகளையும் நம்முடைய ஏமாற்றங்களையும் உடையவர்களாயிருக்கிறோம். ஆகையால் யோபு தன்னுடைய நண்பர்களிடத்திலிருந்து ஆறுதலான வார்த்தைகளைக் கண்டறிய முயற்சித்துக் கொண்டிருந்ததுபோல, இந்த ஈஸ்டர் காலையில் அதே விதமாகவே ஆறுதலான வார்த்தைகளைக் கண்டறியவே நாம் வந்துள்ளோம். 23 அவர்களில் எவருமே அவனுக்கு ஆறுதல் அளிக்க முடியவில்லை. அவனுடைய தொல்லையின் காரணமாக அவர்கள், அவன் இரகசிய பாவியாயிருந்து கொண்டிருந்தான் என்றே அவனைக் குற்றப்படுத்திக்கொண்டிருந்தனர். அப்பொழுது எல்லா தொல்லைகளின் மத்தியிலும் தேவன் அவனைக் காப்பாற்ற வந்தார். 24 யோபு கேள்வி கேட்டுக் கொண்டிருந்தான். அவன் தன்னுடைய சுகவீனம், தன்னுடைய பருக்கள், தொல்லை, மனதுயரங்களை மட்டுமின்றி, தன்னுடைய குடும்பத்தையும், தன்னுடைய எல்லா செல்வத்தையும் இழந்துவிட்டதையும், ஏறக்குறைய தன்னுடைய ஜீவனே எடுக்கப்படவிருந்ததையும் அறிந்திருந்தான். ஆனால் அவன் ஒரு வயோதிக மனிதனாய், முதிர்ந்தவனாய் இருந்து, அவன் கல்லறைக்குப் போய்க்கொண்டிருந்ததையும் அறிந்திருந்தான். யாரோ ஒருவர் அவனைப் பூமியின் மேல் கொண்டு வந்திருந்தார் என்பதை விசுவாசித்து, அவன் தானாகவே இங்கே வந்திருக்க முடியாது என்பதையும் அறிந்திருந்தான். அவன் ஒரு தகப்பனிடத்திலிருந்தும், ஒரு தாயினிடத்திலிருந்துமே, வந்திருந்தான் என்றும், ஆனால் அதே சமயத்தில் அந்த தகப்பனும், தாயும் அவர்களைக் கொண்டுவர யாரோ ஒருவரை உடையவர்களாக இருந்திருக்க வேண்டும் என்பதையும் அவன் அறிந்திருந்தான். எனவே இது, “முதல் நபரைக் கொண்டு வந்தது யார்?” என்று மூல காரணத்திற்கு திரும்பிச் செல்லும்படி சுழல ஆரம்பிக்கும். 25 அப்பொழுது அவன் இதைக் குறித்து வியப்படைந்தான். “இங்கே நான் மிருகத்தைக் காட்டிலும் மேலான ஒரு ஜீவனைக் கொண்டவனாய், தாவர ஜீவனைப் பார்க்கிலும் ஒரு மேலான ஜீவனைக் கொண்டவனாய் சுற்றி நடந்து கொண்டிருப்பது என்பது ஒரு வினோதமான காரியமாய் உள்ளது”. ஆனால் அதே சமயத்தில் அவன், “மரமானது மரித்துப்போனாலும் அது மீண்டும் ஜீவிக்கும். ஒரு—ஒரு பூ மரித்துப் போனாலும் அது மீண்டும் ஜீவிக்கும்” என்று கூறினான் என்பதை நாம் கண்டறிகிறோம். ஆனால் அவன், “மனுஷனோ படுத்துக் கிடக்கிறான். அவன் ஜீவித்துப்போனபின் அவன் எங்கே? அவனுடைய பிள்ளைகள் வந்து அவன் மீது துக்கப்பட்டாலும், கனமடைந்தாலும், அவன் அதை கவனியான்” என்றான். எனவே அவன், “தேவன் மலர்களையும், தாவர ஜீவன்களையும் மீண்டும் ஜீவிக்கும்படியான அப்பேற்பட்ட காரியத்தை அனுமதித்திருக்க, ஆனால் அதே சமயத்தில் ஒரு மனிதனால் மீண்டும் ஜீவிக்க முடியாமலிருப்பதின் காரியம் தான் என்ன?” என்றே வியந்து கொண்டிருந்தான். இவை யாவுமே அவனைத் தொல்லைப்படுத்தியிருந்தது. 26 நாம் இக்காலையில் இந்த முடிவிலிருந்து அப்படியே விளக்குவோமேயானால் நலமாயிருக்கும். அதற்காகத்தான் நாம் இங்கே இருக்கிறோம். நாம் ஈஸ்டர் கதையைத் திரும்பத் திரும்பப் கேட்டிருக்கிறோம். அதை முன்னுக்குப் பின் திரும்பத் திரும்பப் படிக்கிறோம்; மேலும் நீங்கள் இன்றைக்கு உங்களுடைய வானொலி ஒலிபரப்புகளில் பல்வேறுபட்ட ஊழியக்காரர்கள் அதை அணுகிப் பேசுவதைக் கேட்ப்பீர்கள். ஆனால் நான் இக்காலையில் என்னுடைய சிறுக் குழுவிற்காக யோசித்ததும், கர்த்தர் எனக்கு அளித்திருக்கிறதும் என்னவெனில், என்னால் கூடுமானால் நான் அதனை ஒரு வித்தியாசமாக நோக்கிப் பார்க்கும் நிலையிலிருந்து, அதாவது: நமக்கு ஏன் இந்தத் தொல்லைகள் உண்டாகின்றன? இந்தக் காரியங்களை உண்டாக்கச் செய்கிறது எது? ஏன் ஒரு கிறிஸ்தவன் எப்போதுமே குழப்பமடைய வேண்டும்? ஏன் ஒரு கிறிஸ்தவனுக்கு எல்லாக் காரியங்களும் பரிபூரணமாகச் செயல்படுவதில்லை? ஆனால் அவ்வாறு அது செயல்படுகிறதில்லை. நாம் அதை அறிவோம் என்ற ஓர் இடத்திற்கு வந்து அணுகவுள்ளேன். 27 சில சமயங்களில் நாம் பாவிகளாயிருந்தபோது நமக்கு உண்டாயிருந்த தொல்லைகளை காட்டிலும் நாம் ஒரு கிறிஸ்தவனாக ஆகும்போது நாம் அதிக தொல்லைகளை உடையவர்களாக இருக்கிறோம். மேலும் தொடர்ந்து, “நீதிமானுக்கு வரும் துன்பங்கள் அநேகமாயிருக்கும்; கர்த்தர் அவைகளெல்லாவற்றிலும் நின்று அவனை விடுவிப்பார்” என்று எழுதப்பட்டுள்ளது. தேவன் அநேக துன்பங்களும், வினோதமான உணர்வுகளும், நம்முடைய புரிந்து கொள்ளுதலுக்கு அப்பாற்பட்ட வினோதமான காரியங்களும் உண்டாகும் என்று வாக்களித்தார். ஆனாலும் அவைகள் எப்பொழுதும் நம்முடைய நன்மைக்காகவே செய்யப்படுகின்றன. நாம் அதனை வெறுமனே புரிந்து கொள்ள முடியாது, ஏனென்றால் நாம் புரிந்து கொண்டால், அப்பொழுது நமக்கு விசுவாசமே இருக்காது; அப்பொழுது நாம் ஒரு புரிந்துகொள்ளுதலோடு செல்வோம். ஆனால் நாம் இதைச் செய்கிறோம், நாம் இதைப் பெற்றுக்கொள்கிறோம், அது நமக்கான ஒரு நன்மையான காரியத்தையே கிரியை செய்யப் போகிறது என்று விசுவாசத்தின் மூலமாக அவருடைய வார்த்தையின் மூலமாக நாம் விசுவாசிக்கிறோம். நம்மால் அதை இன்றைக்கு இக்காலையில் இதன் பேரிலானதைப் பற்றிப் பிடித்துக்கொள்ளக்கூடுமானால் நலமாயிருக்கும். நாம் நம்முடைய எல்லா தொல்லைகளையும்…பற்றிப்பிடித்துக் கொள்ளக்கூடுமானால் நலமாயிருக்கும். நம்மில் எவருமே அவைகளில் பாதிக்க முடியாதவர்களாயிருக்கவில்லை. எனவே அந்தக் காரியங்கள் நம்முடைய நன்மைக்கானதாகவேயுள்ளன என்பதை நம்மால் அறிந்து கொள்ளக்கூடுமானால் நலமாயிருக்கும். 28 வேதாகமத்தில் உள்ள வேத வாக்கியங்களில் ஒன்றில், “நம்மீது கொண்டு வரப்படுகின்ற சோதனைகள் பொன்னைப் பார்க்கிலும் விலையேறப் பெற்றவைகளாயிருக்கின்றன. ஏனென்றால் இந்த சோதனைகள் தேவன் நமக்கு தருகின்றவைகளாயுள்ளன” என்று எழுதப்பட்டுள்ளது. நாம் அவருடைய சொத்தான பிறகு, நம்முடைய அறிக்கையிடுதல், நம்முடைய ஞானஸ்நானம், அவருக்காக ஜீவியத்தில் நடக்கும்படியான நம்முடைய வாக்கு, அதன்பின்னர் நம்மீது வருகின்ற ஒவ்வொரு சோதனையும் அவருடைய மகிமைக்காக நம்மைப் பரிபூரணப் படுத்துகிறதாயிருக்கிறது. அது சோதனை உண்டாவதற்கு முன்னர் தேவன்தாமே தம்மை நமக்கு உண்மையாக்க முடிந்ததைப் பார்க்கிலும் அதிக உண்மையாகக் காணக்கூடிய ஒரு ஸ்தானத்திற்கே நம்மைக் கொண்டு வருகிறது. 29 அது சத்தியமாயிருக்கிறது என்பதை அறிய நான் போதுமான காலம் ஜீவித்துவிட்டேன் என்று கூறும்படியாக நான் இந்தக் காலையில் யோபுவோடு சேர்ந்து கொள்ள விரும்புகிறேன். நான் என் சொந்த ஜீவியத்தில் அதைக் கண்டிருக்கிறேன். அதாவது ஒவ்வொரு சமயத்திலும் வழக்கத்திற்கு மேற்பட்டதான ஒரு சூழ்நிலை எழும்பும்போது என்னால் அதனைத் தட்டிக் கழிக்கவோ அல்லது அதனைத் தனித்தடக்கிடவோ அல்லது அதனை மேற்கொள்ளவோ முடியாது. ஆனால் தேவனோ மகிமையாய் அதினின்று வெளியேற ஒரு வழியை உருவாக்குகிறார். எப்படியாய் அவருடையக் கிருபையானது எப்போதுமே அதனைச் செய்கிறது என்று நான் அப்படியே வியப்படைகிறேன். ஆனால் அவரே அதைச் செய்கிறார். 30 இந்த எல்லாக் காரியங்களிலுமே, சாத்தான் நம்மை, “ஓ, இது ஏன் சம்பவித்தது? நான் ஏன் இந்தவிதமாய் இருக்க முடிவதில்லை?” என்று நம்மை சிந்திக்கும்படிச் செய்யவும், நம்மை நிலைகுலையச் செய்யவும், நம்மை எளிதில் பயமடையும்படியான பதற்றமான நிலைமைக்குள்ளாக்கவுமே முயற்சிக்கிறான் என்பது நினைவிருக்கட்டும். 31 ஒரு சில நாட்களுக்கு முன்னர் நான் வெளியே சென்று என் ஜீவியம் முழுவதிலும் நான் எப்போதுமே கண்டிராத ஒரு பகட்டு ஆரவாரமான அலங்காரங்கொண்ட, மிகவும் அழகு வாய்ந்த ஓர் இடத்தைக் கண்டேன், அது நம்முடைய சகோதரன் ஓரல் ராபர்ட்ஸ் அவர்களின் மகத்தான கட்டிடமாயிருந்தது. நான் அந்தத் திடமான சலவைக்கல்லையும், அதற்குள் எங்குமே ஒரு ஜன்னல் இல்லாமலிருப்பதையும் கண்டேன். ஆனால் அது எப்படியாய் பொருத்தப்பட்டிருந்தது? நான் நவநாகரீக திரைப்படத் துறையினர் உள்ள ஹாலிவுட் என்ற இடத்தில் இருந்திருக்கிறேன். நான் இராஜாக்களுடைய அரண்மனைகளில் இருந்திருக்கிறேன். உலகத்தைச் சுற்றிலுமே அபூர்வமாக முடிந்தளவு எல்லா இடங்களிலும் இருந்திருக்கிறேன். பகட்டான எல்லா இடங்களிலும் அழகான இடங்களிலும், வீடுகளிலும் இருந்திருக்கிறேன். ஆனால் இதனோடு ஒப்பிட்டுப் பார்க்கும்போது எந்த இடத்திலும் எதையுமே, எங்குமே இதைப்போன்று நான் ஒருபோதும் கண்டதேயில்லை. எப்படியாய் அந்தச் சிறிய அலுமினிய கம்பிகள் உட்புறத்தில் ஒன்று சேர்த்து பின்னப்பட்டிருந்தன. ஓ, என் முழு ஜீவியத்திலுமே அவ்வளவு பகட்டு ஆரவாரங்கொண்ட அலங்காரமான எந்தக் காரியத்தையுமே நான் ஒருபோதும் கண்டதேயில்லை. நான் அங்கே அதனூடாக நடந்து சென்றபோது, என்னுடைய கரங்களை எடுத்து அந்தச் சதுர கம்பத் தூண்களையும், அந்த மகத்தான கருங்கல்லையும் தேய்த்துப் பார்த்தேன்; எல்லாமே பிதா, குமாரன், பரிசுத்த ஆவியின் ஒரு திரித்துவ ரூபத்தில் இருந்தது. அந்தப் பொருட்கள் அனைத்துமே அவ்வாறேயிருந்தன. நான் அதற்கு சற்று முன்னர்தான் சகோதரன் டாமி ஆஸ்பர்ன் அவர்களிடத்திலிருந்து வந்திருந்தேன். அவருடைய மகத்தான, கர்த்தருக்காக அங்கே நடைபெறும் வல்லமையான ஊழியத்தையும் கண்டிருந்தேன். 32 நான் வெளியே நின்று, அந்தக் கட்டிடத்தை திரும்பிப் பார்த்து, நான், “தேவனே, நிச்சயமாகவே நான் ஒரு மாய்மாலக்காரனாகிவிட்டிருக்கிறேன். நிச்சயமாகவே நான் ஏதோ ஓரிடத்தில் நாதியற்றவனாயிருக்கிறேன், ஏனென்றால் இந்த ஊழியங்களைக் கொண்ட மனிதர்களோ என்னிடத்திலிருந்து வெளியே வந்தவர்களாயிற்றே” என்று எண்ணினேன். மேலும் நான், “என்ன? கர்த்தாவே, அதைப்போன்ற எந்தக் காரியத்தைக் கொண்டும் நீர் என்னை நம்பமுடியாத அளவிற்கு நான் அவ்வளவு நம்பிக்கைக்கு ஆளாகாதவனாயிருக்கலாம். நீர் என்னைக் கூட்டங்களுக்கும் மற்ற காரியங்களுக்கும் ஒரு சில டாலர்களை சிறிதளவில் செலுத்த அனுமதித்திருந்தாலும்கூட இப்பொழுது அவர்களோ என்னைத் திருத்தியல் சிறைச் சாலைக்கு அனுப்ப முயற்சித்துக் கொண்டிருக்கின்றனரே. எனவே நான் ஏன் இப்படிப்பட்ட ஒரு மாய்மாலக்காரனாயிருக்கிறேன் அல்லது நான் ஏன் இப்படிப்பட்ட ஒரு நம்பிக்கைக்கு ஆளாகாத நபராயிருக்கிறேன்?” என்று எண்ணிக் கொண்டேன். நான் பண்டைய யோபுவைப் போல சாம்பல் குவியலின் மேல் இருந்தேன். 33 அப்பேற்பட்ட தனிப்பெரும் சிறப்புடைய, அதாவது சீர் செய்யப்படாத கரடு முரடான ஒரு குடிலில் பிறந்த ஓர் ஏழையான பெந்தெகோஸ்தே பையனால் அந்த மிகப்பெரிய மகத்தான கட்டிடத்தை உருவாக்க முடிந்ததே என்று எண்ணி மூச்சுகூட விடமுடியாத அளவிற்கு நான் அங்கே வெளியே நின்று கொண்டிருந்தேன். அப்பொழுது நான், “ஓ, தேவனே, நான் ஒருக்கால் தகுதியில்லாதவனாயிருக்கலாம்” என்று எண்ணினேன். 34 அப்பொழுது ஒரு மெல்லிய சத்தம் அந்தத் தாழ்வாரங்களினூடாக அப்படியே இறங்கி வந்து, “ஆனால் நான் உன்னுடைய பங்காயிருக்கிறேன்” என்றுரைத்தது. 35 அப்பொழுது நான், “ஓ, தேவனாகிய கர்த்தாவே, ஓ, கர்த்தாவே, அப்படியானால் அது அந்தவிதமாகவே நீடித்திருக்கட்டுமே. உனக்கு…ஏனென்றால் உமக்காக அதைப் போன்ற ஒரு மகத்தானப் பணியைத் தொடர்ந்து செய்து கொண்டு போகும்படியான அறிவாற்றலை நான் பெற்றிருக்கவில்லை. நான் ஒரு கல்வியறிவற்ற நபராயிருக்கிறேன். ஆனால் நீர் என்னுடைய பாகமாய் இருக்கும்வரையில் நான் உம்முடையவனாயிருக்கிறேன். நீரே என்னை நடத்தும். நானாகவே என்னை வழிநடத்திக் கொள்ள முடியவில்லையே. ஓ, கர்த்தாவே என்னை நடத்துமே!” என்றே எண்ணினேன். 36 அது அந்தப் புனிதமான மணல்களின் மேல் நம்மை நெருக்குகிற அந்த நெருக்கடியான நேரங்களாய் உள்ளன. அது வேதாகமத்தில் இருந்தது. எவ்வளவு பெரிய துயரங்கொண்ட மனோ வேதனையான அவலமாயிருந்தாலும் கவலைப்பட வேண்டியதில்லை. ஏனென்றால் தேவன் உங்களோடு முடிவுறச் செய்துகொள்ளும் வரையில் சாத்தானால் உங்களுடைய ஜீவனை எடுக்கவே முடியாது என்பதை நினைவில் கொள்ளுங்கள். தேவன் அதை அனுமதித்தாலொழிய எந்த ஒரு காரியமும் உங்களுக்கு சம்பவிக்க இயலாது. தேவன் அனுமதித்தாலொழிய எந்த பொல்லாங்குமே உண்டாகாது. அது உங்களுடைய நன்மைக்காக அவர் கிரியை செய்து கொண்டிருப்பதாயுள்ளது. நாம் அதை சிந்தித்துப் பார்ப்போமாக. 37 ஜலப்பிரளயமானது உலகத்தை அழிக்க வந்தபோது, அதனால் நோவாவை அழிக்க முடியவில்லை. நோவாவை அழித்துப் போட முடியவில்லை. ஏனென்றால் அவன் செய்யும்படியான ஒரு பணியை தேவன் உடையவராயிருந்தார். 38 ஓர் நாள் ஒரு பெரிய அடிமைத்தனத்தின் கீழாக ஒரு பெரிய தேசத்தில் நாம் அறிந்துள்ள சாத்ராக், மேஷாக், ஆபேத்நேகோ என்ற எபிரேய பிள்ளைகள் சிலர் அங்கிருந்தனர். அங்கே அவர்கள் ஒரு தீர்மானம் செய்ய வேண்டிய ஒரு நிலைக்கு வரவேண்டியதாயிருந்தது. அதாவது ஏதோ காரியம் செய்யப்பட வேண்டியதாயிருந்தது. அவர்கள் தங்களுடைய—தங்களுடைய…அவர்களுடைய விசுவாசம் ஒரு சோதனைக்குட்படுத்தப்பட்டது. 39 உங்களுடைய விசுவாசம் ஒரு சோதனைக்குட்படுத்தப்படும்போது, அப்பொழுது சோர்ந்து போய்விடாதீர்க்கள். நீங்கள் விசுவாசிப்பதோடு சரியாகத் தனித்திருங்கள். 40 அவர்கள் அந்த வேளையை சந்திக்கும்படியான விசுவாசமானது ஒரு சோதனைக்குட்படுத்தப்பட்டது. அப்பொழுது அவர்கள் ஒரு நெருக்கடியான வேளையினூடாகச் சென்றனர். அவர்கள் ஒர் சாம்பல் குவியலண்டைக்கு மாத்திரம் செல்லவில்லை. ஆனால் அவர்களோ ஒரு அக்கினிச் சூளைக்குள்ளாகவே சென்றனர். ஆனால் சாத்தானாலும் அவர்களை அழிக்கமுடியவில்லை, ஏனென்றால் தேவனுடையத் தீர்மானம் இன்னும் நிறைவேற்றப்படாமலிருந்தது. அவர்களால், “என் மீட்பர் உயிரோடிருக்கிறார் என்று நான் அறிந்திருக்கிறேன்” என்ற இந்த நம்பிக்கையோடு அங்கே உள்ளே செல்லமுடிந்தது. அங்கே அவர்களால், “இந்த அக்கினி சூளையிலிருந்து எங்களை விடுவிக்க தேவன் வல்லவராயிருக்கிறார் என்று நாங்கள் நிச்சயித்திருக்கிறோம். ஆனால் அப்படி விடுவிக்காமற்போனாலும் நாங்கள் இந்தச் சிலையைப் பணிந்து கொள்ளமாட்டோம்” என்ற இந்த நம்பிக்கையோடு உள்ளே செல்ல முடிந்தது. 41 சாத்தானால் அவர்களைப் பறிக்க முடியவில்லை. தேவனுடையத் தீர்மானம் நிறைவேற்றப்படும் வரையில் அவனால் நோவாவை ஜலப்பிரளயத்தில் மூழ்கடிக்க முடியவில்லை. தேவனுடையத் தீர்மானம் நிறைவேற்றப்படும் வரையில் அவனால் எபிரேய பிள்ளைகளைச் சுட்டெரிக்க முடியவில்லை. தேவனுடையத் தீர்மானம் நிறைவேற்றப்படும் வரையில் அவனால் யோபுவை பருக்களாலும், தொல்லைகளினாலும் கொல்ல முடியவில்லை. தேவனுடையத் தீர்மானம் நிறைவேற்றப்படும் வரையில் சிங்கங்களால் தானியேலைத் தின்னமுடியவில்லை. தேவனுடையத் தீர்மானம் நிறைவேற்றப்படும் வரையில் மரணமும், வயோதிகமும் ஆபிரகாமை மேற்கொள்ள முடியவில்லை. 42 நம்முடைய ஜீவியத்தைக் குறித்துத் தேவனுடையத் தீர்மானம் நிறைவேற்றப்படும் வரையில் அது உங்களையும் மேற்கொள்ள முடியாது அல்லது அது என்னையும் மேற்கொள்ள முடியாது. எனவே நாம் ஆறுதலுக்காகவே ஒன்றுகூடி வருகிறோம். 43 ஏன் தேவனானவர் தொல்லைகள் வர அனுமதிக்கிறார்? தேவன் தொல்லையை சேணம்பூட்டி, அதனுடைய வாய்க்கு கடிவாளமிட்டு, அது தனக்கு கீழ்ப்படியும்படிக்கு செய்கிறார். எனவே அந்தத் தொல்லைகள் நம்மை தேவனோடு ஒரு நெருங்கிய ஐக்கியத்திற்குள்ளாகவே கொண்டு வருகின்றன. 44 ஜலப்பிரளயம் உண்டாகும் வரைக்கும் வானவில்லே இல்லாமல் இருந்தது. ஆனால் நோவா ஒரு வெள்ளப் பெருக்கில் நாற்பது நாட்கள் இரவும் பகலுமாய் மிதக்கும்படியான அந்த நிலைமைக்குள்ளாக அவன் நெருக்கப்பட்ட பிறகு, அந்தச் சிறிய பேழையோ தண்ணீரில் மேலும் கீழுமாக ஊசலாடியது. அதன் பிறகு ஜலப்பிரளயம் முற்றுப்பெற்றது. அதன் பிறகே அவன் முதன் முறையாக நம்பிக்கையின் உடன்படிக்கையாக, வாக்குத்தத்தத்தின் உடன்படிக்கையாக வானவில்லைக் கண்டான். அவன் உபத்திரவத்தினூடாகச் சென்றிருந்த பிறகே, அப்பொழுதே அவன் வாக்குத்தத்தத்தைக் கண்டான். 45 அந்தவிதமாகவே நீங்களும் உபத்திரவத்தினூடாகச் சென்ற பிறகே வாக்குத்தத்தத்தைக் காண்கிறீர்கள். நான் அந்தச் செய்யுளை இல்லை, ஆராதனைக் கீதத்தை விரும்பியிருக்கிறேன். மற்றவர்கள் அந்தப் பரிசை வெல்ல போராடி சண்டையிட்டு இரத்த சமுத்திரங்களினூடாக பயணித்திருக் கையில், நான் ஒரு பூ மெத்த மலர் படுக்கையின் மேல் இளைப்பாறுதலாக பரலோகத்திற்கான வீட்டிற்கு கொண்டு செல்லப்பட வேண்டுமா? 46 நாம் ஆறுதலுக்காகவும், சமாதானத்திற்காகவும் வேண்டிக் கொள்கிறோம். தேவன் நமக்கு அளிக்கக்கூடிய சோதனைகளும், உபத்திரவங்களுமே அவர் நமக்கு அளிக்கும் மிக உயரிய சிறப்பாகும். அதுவே ஆறுதலையும் சமாதானத்தையும் காட்டிலும் மேலானதாயுள்ளது. நம்முடைய ஆறுதல்களோ நதிக்கு அப்புறத்தில் உள்ளது. 47 அது அந்த எபிரேய பிள்ளைகள் அந்த அக்கினிச் சூளைக்குள்ளாகச் செல்ல பலவந்தம் பண்ணப்படும் வரையில் இல்லாதிருந்தது. அவர்கள் தங்களுடைய மிகப் பெரும்பாலான தீர்வு காணப்படாத சோதனைகளில் ஒன்றின் பேரிலேயே அவர்களுக்கு மத்தியில் தேவபுத்திரனுக்கு ஒப்பான ஒருவர் நிற்க அவர்கள் கண்டனர். அவர்களுடைய தொல்லைகள் அவர்களுக்கு மத்தியிலே அந்த அக்கினி ஜூவாலையை தணிக்கும்படியான தென்றல் காற்றில் தேவபுத்திரனை தோற்றுவித்தது. ஆனால் அவர்கள் அந்த அக்கினிக்குள்ளாகச் செல்லும் வரையில் அந்தத் தேற்றரவாளன் பிரசன்னமாகவேயில்லை. 48 தானியேல் உலகத்தின் காரியங்களினால் தன்னைத் தீட்டுப்படுத்தலாகாதென்று தன் இருதயத்தில் தீர்மானம் பண்ணியிருந்தபோது, அவன் தேவனண்டை ஜெபிப்பதா அல்லது ஒரு சிங்கங்களின் கெபிக்குள்ளாகச் செல்வதா என்ற ஒரு சோதனையினூடாகச் செல்லப் பலவந்தம் பண்ணப்பட்டான். ஆனால் அது அந்த அக்கினிச்சூளை சூடேற்றப்பட்டதற்கு பிறகு உண்டானதாயிருந்தது. அவன் ஒரு சிங்கங்களின் கெபிக்குள்ளாகத் தூக்கி யெறியப்பட்டான். அதாவது, அதற்குப் பின்னர், கர்த்தருடைய தூதனானவர் அவனுக்கு மத்தியிலே நிற்பதை, அவனுக்கும் அந்த சிங்கங்களுக்கும் நடுவே அந்த மகத்தான அக்கினி ஸ்தம்பம் நின்று காப்பதை அவன் கண்டான். சிங்கங்களால் அவனண்டை நெருங்க முடியவில்லை, ஏனென்றால் அவன் விசாரணைகளினூடாகவும், சோதனைகளினூடாகவும், தொல்லைகளினூடாகவும் சென்றிருந்தான். அவனுடைய தேவன் அவனை அதிலிருந்து விடுவிக்க வல்லவராயிருந்தார் என்பதை அவன் அறிந்திருந்தான். 49 ஆபிரகாம் நிலமானது விளைநிலமற்றதானதைக் கண்டிருந்த பிறகு, வறட்சி உண்டாயிருந்த பிறகு, லோத்து தன்னை வேறுபிரித்துக் கொண்டு உலகத்தில் இன்பமிகுந்த முறையில் வாழ சென்றுவிட்டதைக் கண்ட பிறகே, இதுவும் உண்டானது. அவன் தன்னுடைய மந்தை மேய்ப்பரின் புலம்பல்களையும், கூக்குரல்களையும் கேட்ட பிறகே, தன்னுடைய மிருக ஜீவன்களுக்குப் புல்லில்லாததைக் கேட்ட பிறகே, இது உண்டானது. ஆனாலும் தேவன் அவனுக்கு அளித்திருந்த, அவனை சஞ்சரிக்கும்படி கூறியிருந்த தேசத்தில் அவன் வெளியேறாமல் தங்கி வந்தான். அப்பொழுது அந்த நாளிலே, அவனுடைய பொறுமையின் முடிவுமட்டுமாய் அவன் சோதிக்கப்பட்டிருந்த பிறகு, அந்த நாளிலே, அவனுடைய சோதனை முற்றுப் பெற்றபோது, அவன் அந்நாளில் கருவாலி மரத்தின் கீழே ஏலோகிமோடு முகமுகமாய்ப் பேசினான். அது அவனுடைய சோதனைகளில் துன்பப்பட்ட பின்னரே உண்டாயிருந்தது. அவன் தொல்லைகளினூடாகச் சென்ற பிறகு, அதாவது அவன் தொல்லைகளினூடாக இருந்து வந்தபோது, தேவன் அவனுக்கு ஒரு மனித ரூபத்தில் பிரசன்னமாகி, அங்கே அமர்ந்து, அவன் மணமானவன் என்றும், அவனுடைய மனைவியின் பெயர் சாராள் என்றும், அவள் கூடாரத்தின் பின்புறத்தில் இருந்து அவரைக் குறித்து நகைத்தாள் என்றும் கூறினார். அங்கே ஆபிரகாம் அவரை “ஏலோகிம்” என்று அழைத்தான். அது சோதனைக்கும் உபத்திரவத்திற்கும் பின்னரே உண்டாயிருந்தது. 50 ஓ, சபையானது தொல்லைகளுக்கும், சோதனைகளுக்கும், ஏளனமான நகைப்புகளுக்கும், பரியாசத்திற்கும் மற்றும் சபையானது, பெந்தெகோஸ்தே சபையானது கடந்து வந்துள்ள காரியங்களுக்குப் பிறகு, தேவன் நமக்கு மகத்தான அடையாளங்களையும், அற்புதங்களையும் செய்கிறதை நாம் காண்கிறோம் என்பதை கண்டறிந்து கொள்ளும்படியாகத் தன்னையே இன்றைக்கு விழித்தெழச்செய்ய மாத்திரம் கூடுமானால் நலமாயிருக்கும். உழைப்புகளுக்கும், நாளின் பாடுகளுக்கும் பிறகு, இவை யாவும் கடந்து சென்ற பிறகே, அப்பொழுது நாம் இயேசுவை முடிவாகக் காண்போம். அவர் எனக்காக காத்துக் கொண்டிருப்பார், இயேசுவானவர் தம்முடைய அழகான சிங்காசனத்தின் மேல் அவ்வளவு அழகானவராயும், உண்மையான வருமாயிருந்து பகற்காலத்தினூடாகச் சென்ற பிறகே அவர் நம்மை வீட்டிற்கு வரவேற்பார். எனவே பகற்காலமாயிருக்கும்போதே, நாம் உழைப்போமாக. 51 இந்த எல்லா மகத்தான மனிதர்களையும் குறித்து குறிப்பிட்டு கூறும்படிக்கு நம்முடையக் காலை ஆராதனையின் பெரும்பான்மையான நேரத்தை நாம் எடுத்துக் கொள்வோம். அவர்கள் சோதனைகளினூடாகச் சென்று தேவனைக் கண்டனர். அவர்கள் சோதனைகளினூடாகச் சென்று தூதர்களைக் கண்டனர். அவர்கள் சோதனைகளினூடாகச் சென்று வெளிப்பாடுகளைப் பெற்று, அடையாளங்களையும், அற்ப்தங்களையும் மற்ற காரியங்களையும் கண்டனர். 52 ஆனால், ஓ, யோபு, கண்டதை அவர்களில் எவருமே காணவில்லை. அந்த எல்லா மனிதர்களுமே தூதர்களைக் கண்ட பிறகு, தேவனைக் கண்ட பிறகு, அந்த மற்ற எல்லாக் காரியங்களையும் கண்ட பிறகும், அவர்கள் கல்லறைக்கு அப்பால் அவர்களுக்கு நம்பிக்கைகளை அளிக்கும்படியான எந்த காரியத்தையுமே ஒருபோதும் காணவில்லை. ஆனால் யோபுவோ உயிர்த்தெழுதலைக் கண்டானே! அவன் ஈஸ்டரைக் கண்டான். அவன் ஒவ்வொரு இருதயத்தையும் தேற்றுகிற அந்தக் காரியத்தைக் கண்டான். அப்பொழுது அவன், “ஆ, நான் இப்பொழுது சொல்லும் வார்த்தைகள் எழுதப்பட்டால் நலமாயிருக்கும்; அவைகள் ஒரு புஸ்தகத்தில் வரையப்பட்டு, அல்லது என்றென்றைக்கும் நிலைக்க அவைகள் கருங்கல்லிலே உளிவெட்டாகவும் ஈய எழுத்தாகவும் பதிந்தால் நலமாயிருக்கும்” என்றான். 53 பாருங்கள், ஒவ்வொரு காரியமும் அவனுக்கு எதிராக திரும்பியிருந்தது. அவனுடைய, அவனுடைய வேலைக்காரர்களும் கூட அவனிடத்தில் பேச மனதில்லாதிருந்தனர். அவனுடைய மனவியும் ஒரு அந்நியாளாயிருந்தாள். எனவே அவன் அங்கே அந்த சாம்பல் குவியலின் மேல் அந்த மகத்தான சோதனையில் அமர்ந்திருந்தான். சபையோர் வந்து ஏழு நாட்களாக அவனுக்குத் தங்களுடைய புறமுதுகையேக் காட்டினர். எவருமே அவனைத் தேற்றவில்லையே! 54 அப்பொழுது அவன், “என் மீட்பர் உயிரோடிருக்கிறார் என்றும், அவர் கடைசிநாளில் பூமியின் மேல் நிற்பார் என்றும் நான் அறிந்திருக்கிறேன். நான் அறிந்திருக்கிறேன்! ஆ, நான் இப்பொழுது சொல்லும் வார்த்தைகள் எழுதப்பட்டால் நலமாயிருக்கும்; அவைகள் என்றென்றைக்கும் மங்கிப் போகாமலிருக்க ஒரு கருங்கல்லிலே உளிவெட்டாகவும் ஈய எழுத்தாகவும் பதிந்தால் நலமாயிருக்கும், ஏனென்றால் என் மீட்பர் உயிரோடிருக்கிறார் என்று நான் அறிந்திருக்கிறேன்! நான் அறிந்திருக்கிறேனே! நான் அறிந்திருக்கிறேனே!” என்று கதறினபோது, அவன் ஈஸ்டரின் தரிசனத்தைக் கண்டிருக்க வேண்டும். 55 யோபுவே, நீ எதை அறிந்திருக்கிறாய்? “என் மீட்பர் உயிரோடிருக்கிறார் என்று நான் அறிந்திருக்கிறேன்.” நீங்கள் கவனித்தீர்களா? அங்கே யாரோ ஒருவர் ஜீவித்துக் கொண்டிருந்தார் என்பது மாத்திரமல்ல, ஆனால் அவர் யோபுவிற்கு ஒரு மீட்பராய் இருந்தாரே! 56 ஓ, கர்த்தருடைய நாமம் ஸ்தோத்தரிக்கப்படுவதாக! நான் ஈஸ்டரின் பாகமாயிருக்கிறேன் என்பதற்கும், நான் அந்த உயிர்த்தெழுதலின் பாகமாயிருக்கிறேன் என்பதற்கும் நான் மிகவும் மகிழ்ச்சியடைகிறேன். நாம் இக்காலையில் அதனுடைய பாகமாயிருக்கிறோம், ஏனென்றால் நமக்குள் வாசமாயிருக்கிற அந்த உயிர்த்தெழுதலின் ஜீவனே (அந்த பங்காளராயிருப்பவரே) அந்த ஈஸ்டரைக் கொண்டு வந்தது. “என் மீட்பர் உயிரோடிருக்கிறார்…என்று நான் அறிந்திருக்கிறேன்”. உனக்கு என்ன தெரியும்? நான் அதை யூகித்துக் கொண்டிருக்கவில்லை. நாம் இன்றைக்கு அதிகப்படியான யூகித்தலையே பெற்றுள்ளோம். “என் மீட்பர் உயிரோடிருக்கிறார் என்று நான் அறிந்திருக்கிறேன்”. ஆம் ஐயா. 57 இப்பொழுது அவர் என்னவாயிருந்தார்? அவர் உயிரோடிருந்ததினால், அவர் யோபுவிற்கு ஒரு மீட்பராயிருந்தார். “என்” தனிப்பட்ட, என் “என் மீட்பர் உயிரோடிருக்கிறாரே!” 58 யோபுவே, உனக்கு வேறு என்ன கூடுதலாகத் தெரியும்? அந்தத் தரிசனத்தில் நீ என்னத்தைக் கண்டாய்? “அவர் கடைசி நாளில் பூமியின் மேல் நிற்பார். இந்த என் தோல்முதலானவை அழுகிப்போனபின்பு, நான் என் மாம்சத்தில் இருந்து தேவனைப் பார்ப்பேன். அவரை நானே பார்ப்பேன்; என் மீட்பர் உயிரோடிருக்கிறார் என்றும், அவர் கடைசிநாளில் பூமியின் மேல் நிற்பார் என்றும் நான் அறிந்திருக்கிறேன். இந்த வாஞ்சையால் என் உள்ளிந்திரியங்கள் எனக்குள் சோர்ந்துபோகிறது. இந்த என் தோல்முதலானவை அழுகிப்போனபின்பு, நான் என் மாம்சத்தில் இருந்து தேவனைப் பார்ப்பேன்”. அந்த மகத்தான தரிசனத்தினூடாக இதையேக் கண்டான். 59 தானியேல் தூதனைக் கண்டான். எபிரேய பிள்ளைகள் தேவபுத்திரனைக் கண்டனர். நோவா வானவில்லைக் கண்டான். ஆபிரகாம் தேவனை முகமுகமாய் கண்டான். ஆனால் யோபுவோ உயிர்த்தெழுதலைக் கண்டான். யோபு முன்னோக்கியவாறே எதிர்ப்பார்த்திருந்தான். எல்லாக் கோத்திரப் பிதாக்களும், வேதாகமத்தின் மகத்தான பரிசுத்தவான்களும் ஓர் உயிர்த்தெழுதலின் நேரம் உண்டாகும் என்பதைத் தங்களுடைய வெளிப்பாடுகளினூடாகவும், தங்களுடையத் தரிசனங்களினூடாகவும் ஓர் உறுதியோடு அந்த நாளுக்கு முன்னோக்கியவாறு எதிர்நோக்கியிருந்தனர். 60 நாம் இப்பொழுது மகத்தான கிரியைகள் சம்பவிக்கிறதைக் காண்கிறோம். நாம் மகத்தான தேவனுடைய வல்லமைகளைக் காண்கிறோம். அவரால் செய்ய முடிந்த மகத்தான காரியங்களை நாம் காண்கிறோம். அந்த சூரியனை, பூமியைச் சுற்றி வரச் செய்கிற தேவனுடைய வல்லமையை அறியாமல், உங்களால் சூரியனை நோக்கிப் பார்க்க முடியாது. தேவன் ஒருவர் உண்டு என்பதை அறியாமல் ஓர் இளவேனிற்பருவம் வருவதை உங்களால் காணமுடியாது. உங்களால் குருடரின் கண்கள் குணமடைவதையும், செவிட்டுத்தனமுள்ள செவிகள் குணமடைகிறதையும் காணமுடிகிறது. அது தேவன் என்பதை அறிந்து கொள்ள முடிகிறது. ஆனால் அவையாவும் அங்கே இருந்திருக்குமேயானால் நாம் மரித்துப்போன பின்பு நாம் எங்கே போய் விட்டோம்? ஆனால் உயிர்த்தெழுதல், ஈஸ்டர், ஓ, தேவன் எப்போதும் வாக்களித்திருந்த ஒவ்வொருக் காரியத்தையும் முத்தரித்திருந்ததே உயிர்த்தெழுதலாயிருந்தது. 61 அவர்களுக்கு ஓர் உயிர்த்தெழுதல் உண்டாயிருப்பதற்கு முன்னர் அவர்களுக்கு ஒரு சிலுவையிலறைதல் உண்டாயிருக்க வேண்டியதாயிருந்தது. எப்போதுமே சபையானது ஒரு உயிர்த்தெழுந்த வல்லமையைக் காண்பதற்கு முன்பு, ஒரு புதிய ஊழியம் எனக்குத்தானே நடந்தேறுவதை நான் காண்பதற்கு முன்பு, நீங்கள் தேவனோடு ஒரு புதிய ஐக்கியத்திற்குள்ளாக பிரவேசிப்பதற்கு முன்பு, சுயத்தை சிலுவையிலறைதல் என்ற ஒன்று உண்டாக வேண்டும். அப்பொழுதே அங்கே ஓர் உயிர்த்தெழுதல் உண்டாக முடியும். நாம் நம்முடைய சொந்த சிந்தனைகளுக்கு மரிக்க வேண்டும், நாம் நம்முடைய சொந்த வழிகளுக்கு மரிக்க வேண்டும், நம்மைச் சுற்றியுள்ள ஒவ்வொரு காரியத்திற்கும் மரிக்க வேண்டும். நாம் ஒரு புதிய உயிர்த்தெழுதலைக் காணும்படியாக, ஒரு புதிய ஜீவனைக் காணும்படியாக சோதனைகளினூடாகவும், உபத்திரவங்களினூடாகவும் செல்ல வேண்டும். ஒரு பாவி எப்போதுமே ஒரு கிறிஸ்தவனாவதற்கு முன்பு, அங்கே ஒரு மரணம் உண்டாக வேண்டும். அதன் பின்னரே ஓர் உயிர்த்தெழுதல் உண்டாகும். 62 ஆபிரகாம் ஏலோகிமை காண்பதற்கு முன்பு, அங்கே இருபத்தைந்து வருடச் சோதனை உண்டாக வேண்டியதாயிருந்தது. எபிரேய பிள்ளைகள் தேவபுத்திரனைக் காண்பதற்கு முன்பு அவர்கள் ஓர் அக்கினிச் சூளைக்குள்ளாகச் செல்ல வேண்டியதாயிருந்தது. தானியேல் தூதனைக் காண்பதற்கு முன்பு, அவன் சிங்கங்களின் கெபிக்குள்ளாகச் செல்ல வேண்டியதாயிருந்தது. யோபு உயிர்த்தெழுதலைக் காண்பதற்கு முன்பு அவன் கொண்டிருந்த எல்லாவற்றையும் இழந்துபோக வேண்டியதாயிருந்தது. ஆனால் அதன் பின்னரோ ஒரு தரிசனத்தின் மூலமாக அவன் கண்டானே! 63 யோபு ஒரு தரிசனத்தின் மூலமான ஓர் வாக்குத்தத்தத்தின் பேரில் அவ்வளவு உறுதியாக நிற்க முடிந்ததென்றால், கிறிஸ்துவோ மரித்தோரிலிருந்து எழுந்து நித்திரையடைந்தவர்களில் முதற்பலனாகி, நாமும்கூட பிழைப்போம் என்று ஒரு வாக்குத்தத்தத்தின் முத்திரையாக பரிசுத்த ஆவியை திரும்பவும் நம்மேல் அனுப்பிய பிறகு நாம் எவ்வளவு அதிகமான உறுதியுடையவர்களாயிருக்க வேண்டும். “நான் பிழைக்கிறபடியினால் நீங்களும் பிழைப்பீர்கள்”. அவருடைய மகத்தான பிரசன்னம் நமக்கு மத்தியிலே கிரியைச் செய்கிறதையும், அவர் பூமியின் மேலிருந்தபோது செய்த அதே அற்புதங்களையும், அடையாளங்களையும் செய்து, நமக்கு நம்பிக்கைகளை அளிக்கிறதையும் காண்கிறோம். நாம் உயிர்த்தெழுதலண்டை வந்தும், பின்னும் நாம் ஏன் நம்முடைய சாம்பல் குவியலில் தரித்திருக்க வேண்டும்? நாம் இன்றைக்கு ஒரு புதிய தரிசனத்தோடு, ஒரு புதிய வல்லமையோடு, நாம் தேவனை அவருடைய வல்லமையில் காண்கிறோம் என்ற ஒரு புதிய தீர்மானத்தோடு சாம்பல் குவியலிலிருந்து எழுந்திருப்போமாக. நாம் உயிர்த்தெழுதலின் காரியங்கள் வருகிறதைக் காண்கிறோம். 64 நாம் மரணத்தின் நேரத்தில் இருக்கிறோம். நாம் மரண வாசல்களில் உட்கார்ந்து கொண்டிருக்கிறோம். தேசங்களோ மரணத்தின் வாசல்களில் இருக்கின்றன. 65 நீங்கள் யாவரும் வானொலியிலும் மற்றுமுள்ளவைகளிலும் கேட்டிருக்கிறபடியே ரஷ்யாவானது இப்பொழுது ஒரு போர்க் கருவியை கண்டுபிடித்துள்ளது. எனவே அவர்கள் இங்கு வந்து இதனை ஒரு வெடிகுண்டைக் கொண்டு வீசி வெடிக்கச் செய்ய வேண்டியதில்லை. அவர்கள் இங்கு ஏதோ ஒரு சிறு காரியத்தை மேலே கொண்டு வந்து அதனை அவர்களுடைய வேவுகாரர்களிடத்தில் அளிக்க, அந்தச் சிறியப் பண்டகப் பொருளை எந்தத் தேசத்திலாவது பீறிட்டுத் தெறிக்கப் பண்ணினால் இருபத்தி நான்கு மணி நேரத்திற்குள் எல்லோருமே அங்கு பக்கவாதத்தால் தாக்கப்படுவராம். அதன் பின்னர் அவர்கள் வந்து நீங்கள் விழித்தெழும்போது, ஒரு ரஷ்யன் உங்களை பக்கவாட்டில் உதைத்துள்ள, பெரிய உருவங்கொண்ட ரஷய காவற்காரன் உங்களுடைய வீட்டைக் கைப்பற்றி, உங்களுடைய மனைவியை பலாத்காரமாக தூக்கிச்சென்று, உங்களுடைய பிள்ளைகளை வீதியிலே தூக்கியெறிந்து, உங்களுடைய வீட்டை முற்றுகையிட்டு கைவசமாக்கிக் கொள்வான். அவர்களால் அதைச் செய்ய முடியும். அவர்கள் ஒரு காரியத்தையும் இழந்து போகமாட்டார்கள், ஏனென்றால் அவர்கள் அதை வைத்துள்ளனர். அது என்னவென்பதை எவருமே அறியார். ஒவ்வொரு காரியமும் உள்ளே கிரியை செய்து கொண்டிருப்பதைப் பாருங்கள். இப்பொழுது அவர்களால் அதை உபயோகிக்க முடியும். அதைக் குறித்து பயப்படாமல் இருக்க முடியும், ஏனென்றால் எவருமே அதை வைத்திருப்பதில்லை. 66 அது எப்படி வரும் என்பதையோ, என்ன சம்பவிக்கும் என்பதையோ நாம் அறியோம். ஆனால் நாம் சாம்பல் குவியலின் மேல் இருக்கிறோம் என்ற ஒரு காரியத்தையே நாம் அறிவோம். தேசமோ சாம்பல் குவியலின் மேல் உள்ளது. உலகமானது சாம்பல் குவியலின் மேல் உள்ளது. 67 உலகமானது சாம்பல் குவியலின் மேல் இருக்கின்ற காரணத்தால், தேவ ஆவியானவரால் வரமுடியும் என்பதற்கு நான் மிகவும் மகிழ்ச்சியாயிருக்கிறேன். எனவே நம்மால், “என் மீட்பர் உயிரோடிருக்கிறார் என்றும், அவர் கடைசி நாளில் இந்த பூமியின் மேல் நிற்பார் என்றும் நான் அறிந்திருக்கிறேன்” என்று கூறமுடியுமே! என்றோ ஒரு நாள் அவர் வருவார். புலவன் இவ்விதமாய் எழுதினதில் வியப்பொன்றுமில்லையே! ஜீவிக்கும்போது, அவர் என்னை நேசித்தார். மரிக்கும்போது, அவர் என்னை இரட்சித்தார். அடக்கம் பண்ணப்படும்போது, அவர் என் பாவங்களை அதிக தூரம் கொண்டுபோய் விட்டார். உயிர்த்தெழுந்தபோது, அவர் என்னை என்றென்றைக்குமாய் இலவசமாய் நீதிமானாக்கினார். என்றோ ஒரு நாள் அவர் வருகிறார். ஓ, மகிமையான நாளாயிற்றே! 68 அதற்கு முன்பாக அது அவருடைய மாம்சத் தோலினூடாக உடைந்த இரத்தத்துளிகளைக் கொண்ட ஓர் கெத்செமனேயை எடுத்துக் கொண்டது. அங்கே மரித்தோரிலிருந்து உயிரோடெழும்ப முடிந்த நித்தியத் தேவனின் நிரூபணத்தை உண்டாவதற்கு முன்னர் அது இரக்கமற்ற கல்வாரியின் வியாகுல வேதனையை எடுத்துக் கொண்டது. ஓர் ஈஸ்டரை உண்டுபண்ண அது ஓர் கெத்செமேனேயையும், ஓர் கல்வாரியையும் எடுத்துக்கொண்டது—அது எடுத்துக் கொண்டதே. அது நிச்சயமாகவே எடுத்துக் கொண்டது. 69 எப்படியாய் அந்த அப்போஸ்தலர்கள் அந்தக் காலையில் அவர்களால் அவ்வளவாய் திடனற்றுப்போய், பேதுரு, “நான் மிகவும் திடனற்றுப் போய் விட்டேன். எனவே நான் மீண்டும் மீன்பிடிக்கவே சென்று விடுவேன் என்றே நான் நம்புகிறேன். நான் மீண்டும் கீழே சென்று விடுவேன். நான், நான் அவரைப் பார்த்திருக்கிறேன்” என்று கூறுமளவிற்கு ஆகிவிட்டது. 70 அவர்கள் மகத்தான நம்பிக்கைகளை உடையவர்களாயிருந்து, விசுவாசித்திருந்த ஒவ்வொரு காரியமும் பெரிதான இருண்ட ஸ்தலத்தை அடையுமளவிற்கு ஆகிவிட்டது. தேவன் என்ன செய்து கொண்டிருந்தார்? அவர் அந்த அப்போஸ்தலர்களை ஓர் சாம்பல் குவியலண்டைக் கொண்டு வந்து கொண்டிருந்தார். அவர்களுடைய விசுவாசத்தை அவர்களுக்கு உறுதிப்படுத்தும்படியான ஓர் இடத்திற்கு அவர் அவர்களைக் கொண்டு வந்து கொண்டிருந்தார். 71 அப்பொழுது பேதுருவோ, “அவர் கலிலேயாவிலே மகத்தான அற்புதங்களைச் செய்ததை நானே—நானே கண்டிருக்கிறேன். ஆனால், ஓ, அவரோ அப்பால் உள்ள அந்தக் கல்லறையிலே மரித்து உணர்ச்சியுற்று விரைத்துப்போய் கிடக்கிறாரே! எனவே நான் இக்காலையில் சமுத்திரத்தண்டை சென்று, ஒரு வலையை வீசி மீன் பிடிக்கப்போகிறேன். ஒருக்கால் என்னால் சமுத்திரத்திற்கு அப்பால் காணமுடிந்தால், நான் கண்டறிந்து கொள்வேன். கரையிலே நமக்காக அவர் காத்திருந்தபோது, அவரைக் கண்டதை நான் நினைத்துப் பார்க்கிறேன். எனவே நான் மீண்டும் அங்கே செல்வேன் என்று நான் நம்புகிறேன்” என்றான். 72 அதற்கு அப்போஸ்தலர்களும், “என்னவென்று உமக்குத் தெரியுமா? நாங்களும் உம்மோடு செல்வோம் என்றே நம்புகிறோம்” என்றனர். ஓ, அவர்கள் துயரத்தில் ஆழ்ந்திருந்தனர். அவர்களுடைய கண்கள் வீங்கிக்போகுமளவிற்கு அவர்கள் கதறி அழுதிருந்தனர். 73 அந்த நிலைமைகளினூடாக செல்வதை நாம் எப்படியாய் அறிந்துள்ளோம்? எப்படியாய் நாம் அறிந்துள்ளோம். நாம் யாவருமே அந்தக் காரியங்களோடு பழக்கப்பட்டு சம்பந்தப்பட்டுள்ளோம். 74 நான் கிழக்கு திசையை நோக்கியிருக்கிற, இல்லை வால்நட் ரிட்ஜ் கல்லறைத் தோட்டம் என்றழைக்கப்படுகின்ற தொலைவில் உள்ள அந்த மலையுச்சியின் மேல், அப்பால் உள்ள அந்தக் கல்லறையில் விலையேறப்பெற்ற ஒன்றை நான் கிடத்தினதை நினைத்துப் பார்க்கிறேன். எப்படியாய் அங்கே ஒரு சிறிய குழந்தையை கிடத்தினேன். நான் அதை தாயினுடைய கரத்தின் மேல் வைத்து கதறினேன். என்னால் இனி ஒருபோதும் அழவே முடியாத அளவிற்கு நான் கதறி அழுதேன். எனக்குத் தெரிந்த எல்லாவறையும் நான் செய்திருந்தேன். பின்னர் நான் ஒரு துப்பாக்கியை எடுத்துக் கொண்டு தற்கொலை செய்துகொள்ள முயற்சிக்குமளவிற்கு அப்படிப்பட்டதான ஒரு நேரத்திற்குள்ளாக இருந்தேன். அப்பொழுது அங்கிருந்த அந்தச் சிறு அறையில் அந்த நேரத்தில் என்னுடைய முழங்காலில் நின்றிருந்த வேளையில் பரலோகம் மீண்டும் திறக்க, அங்கே அழியாமையின் பிரகாசத்தில் அவள் நிற்பதை நான் கண்டேன். அப்பொழுது அவளுடையக் கரங்களை என்னுடைய தோள்பட்டைகளைச் சுற்றிப் போட்டு, “பில் நீர் புரிந்துகொள்ளவில்லை, நாங்களோ உம்மைக் காட்டிலும் மிகவும் மேலான நிலையில் இருக்கிறோம்” என்று கூறினதை உணர்ந்த வேளையாய் அது இருந்தது. 75 பாருங்கள், அது ஒரு சிலுவையிலறைதலை எடுத்துக் கொள்கிறது. ஒரு மலரிலிருந்து வாசனைத் திரவியத்தைக் கொண்டுவர அதனை கசக்கிப்பிழிதல் நிகழ்ந்தேறுகிறது. அங்குள்ள ஒரு ஜீவியத்தின் மேம்பட்ட நிலையினைப் பெற்றுக்கொள்ள, அந்த ஜீவியத்தின் நசுக்கிப்பிழிதல் நிகழ்ந்தேறுகிறது. அந்தக் காரணத்தினால்தான், இயேசுவானவர் அவர் என்னவாயிருந்தார் என்பதை வெளிக்கொண்டு வரும்படியாக கசக்கிப்பிழியப்பட வேண்டியவராயிருந்தார். சிலுவையிலறைதலுக்கு முன்னர் அவரால் நின்று, “வானத்திலும், பூமியிலும் சகல அதிகாரங்களும், என்னுடைய கரத்தில் கொடுக்கப்பட்டிருக்கிறதே!” என்று கூற முடியாதிருந்தது, ஆனால் சிலுவையிலறைதலுக்குப் பின்னர், அவரால் நின்று, “வானத்திலும், பூமியிலும் சகல அதிகாரங்களும் என்னுடைய கரத்தில் கொடுக்கப்பட்டிருக்கிறதே” என்று கூற முடிந்தது. ஆனால் அது என்ன செய்தது? அது முதலாவது சிலுவையிலறைதலை எடுத்துக் கொண்டது. 76 அது நசுக்கிப்பிழிதலையும், அப்போஸ்தலர்களின் ஏமாற்றத்தையும் எடுத்துக் கொண்டது. அவர்கள் தங்களுடைய இரட்சகரை, அவர்கள் நேசித்திருந்த ஒருவரை கண்டிருந்தனர். பிரேதக்குழியிலிருந்து மரித்தோரையும்கூட எழுப்பின அவரைக் கண்டிருந்தனர். அவர் அதைச் செய்ததை அவர்கள் கண்டிருந்தனர். அதன் பின்னரோ, “அவர்தாமே இக்காலையில் கல்லறையில் குளிர்ந்துபோய் விரைத்துக் கிடக்கிறாரே” என்று எண்ணினர். அது…நிகழ்ந்தது… 77 குருடரின் கண்களை அவர் திறப்பதைக் கண்டிருந்த ஜனங்கள், அவர் அங்கு நின்று ஜனங்களினுடைய இருதயங்களில் இருந்ததை அறிந்து கொண்டதைக் கண்டவர்கள், “அவர்கள் அவரை பின்தொடர்ந்து வந்து கொண்டிருக்கிறார்கள் என்பதை அவர் எப்படி அறிந்து கொண்டார் என்றும், எப்படி அவர் அதை அறிந்து கொண்டார் என்றும் கூறினவர்கள், ஏன் யூதாஸ் அவரைக் காட்டிக் கொடுப்பான் என்பதையும், ஏன் யூதாஸையும் அவர் அறிந்து கொள்ளவில்லை? என்று கூறி, அவரால் அவர்களுடைய சிந்தனைகளை அறிந்து கொள்ள முடிந்திருந்தால், அப்பொழுது அங்கே மேலே மலைகளிலிருந்து போர்வீரர்கள் அவரைப் பிடிக்கத் தடிகளைக் கொண்டும், பட்டயங்களைக் கொண்டும் மற்றுமுள்ள எல்லாக் காரியங்களோடும் வந்துக் கொண்டிருந்ததை ஏன் அவர் அறிந்துக் கொள்ளவில்லை?” என்றுக் கேட்டிருப்பர். 78 பாருங்கள், பிசாசு அவர்கள் மேல் கிரியை செய்து கொண்டு, அவர்களை ஒரு சாம்பல் குவியலின் மேல் அமர வைத்துக் கொண்டிருந்தான். ஏனென்றால் அவர்கள், “நான் அறிந்திருக்கிறேன்” என்பதைக் குறித்த ஒர் சாட்சியை அவர்களுக்கு அளிக்க விரும்பியிருந்தனர். (“நான் யூகிக்கிறேன்” என்றல்ல, அல்லது “ஒருவேளை அது அவ்வண்ணமாய் இருக்கலாம்” என்றல்ல) “நான் அறிந்திருக்கிறேனே! நான் அறிந்திருக்கிறேனே!” 79 அந்தச் சோதனைகள் உங்கள் மீது அதே விதமாக கொண்டுவரப்படுகின்றன என்பது நினைவிருக்கட்டும். ஆகையால் நீங்கள் அதை, “நல்லது, இது ஒருக்கால் சரியாயிருக்கலாம், வேதவாக்கியம் ஒருக்கால் உண்மையாயிருக்கலாம், தெய்வீக சுகமளித்தல் ஒருக்கால் சரியாயிருக்கலாம், பரிசுத்த ஆவியானவர் ஒருக்கால் சரியாயிருக்கலாம்” என்று கூறாதீர்கள். ஆனால் நீங்கள் அந்த அனுபவத்தைப் பெற்றுக் கொள்ளும்போது, அந்தச் சாம்பல் குவியலிலிருந்து வெளியே வந்து, பரிசுத்த ஆவியின் அபிஷேகத்தினால் நீங்கள் தேவனுடைய வெளிப்பாட்டைப் பெற்று, உங்களால், “என் மீட்பர் உயிரோடிருக்கிறார் என்று நான் அறிந்திருக்கிறேன். ஏனென்றால் அவர் எனக்குள்ளாக ஜீவிக்கிறார்” என்று சத்தமிட முடியும். 80 பேதுருவோ, “நான் மீன்பிடிக்கச் செல்லவுள்ளேன்” என்றான். அதற்கு அப்போஸ்தலர்களும், “நாங்களும் உம்மோடு வரலாம் என்று நினைக்கிறோம்” என்றனர். அங்கே சமுத்திரத்தின் நடுவிலே அவர்கள் தங்களுடைய சாம்பல் குவியலின் மேல், அந்தவிதமாயிருந்த தொல்லையில் இருந்தனர். அப்பொழுது அவர்களில் ஒருவன், “ஓ, பேதுருவே, அது எப்படி சம்பவிக்க முடிந்தது? அதைப் போன்ற ஒரு மனிதன் மரிக்கும்படியான அப்படிப்பட்ட ஒரு காரியம் எவ்வாறு நடந்தேற முடிந்தது? அந்த விதமாக இருந்த அவரை எப்படி பிரேதக்குழிக்குள்ளாக வைக்க முடிந்தது? எப்படி அவர்களை அவருடைய முகத்தில் துப்பவும், தாடியைப் பிடுங்கவும், அவருடைய சிரசின் மேல் அந்தக் கிரீடத்தை தரிப்பிக்கவும் அனுமதிக்கும்படி அவரால் நிற்க முடிந்தது? எப்படி அவரால் அதை செய்து விட்டபின், ஓ, இன்னமும் தேவனாயிருக்க முடியும்? என்னால் அதைப் புரிந்துக் கொள்ள முடியவில்லையே” என்று கூறுவதை என்னால் கேட்க முடிகிறது. ஓ, என்னே ஓர் ஏமாற்றம்! 81 அப்பொழுது திடீரென்று அவர்கள் கரையின் மீது நோக்கிப் பார்க்க, அப்படியே அந்த யோபு பெற்ற அதே விதமான ஒரு வெளிப்பாட்டைப் பெற்று, அங்கே நான்காயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் யோபு கண்டதையே அவர்களும் கண்டனர். அங்கே மீட்பர் நின்றார், உயிரோடும், புதுப்பொலிவோடும் கரையின் மீது நின்று கொண்டிருந்தார். அவர் நெருப்பை உண்டுபண்ணி, அதன்மீது இந்தவிதமாகப் பொறிக்கப்பட்ட மீன்களோடு அவர்களை அழைத்தார். இயேசுவானவர் ஒரு பரந்த மேஜையை உடைய வராயிருக்கிறார், அங்கே தேவனுடைய பரிசுத்தவான்கள் போஷிக்கப்படுகின்றனர், அவரோ, “வந்து புசியுங்கள்” என்று தம்முடைய தெரிந்து கொள்ளப்பட்ட ஜனங்களை அழைக்கிறார்; அவர் தம்முடைய மன்னாவினால் போஷித்து, நம்முடைய ஒவ்வொரு தேவைக்கும் வேண்டி யதை அளிக்கிறார்; ஓ, எல்லா நேரங்களிலும் இயேசுவோடு போஜனம் பண்ணுவது இனிமையாய் உள்ளதே! நம்மால் அதை எப்படியாய் எண்ணிப் பார்க்க முடிகிறது? அந்த மகத்தான காரியங்கள் எப்படியாய் நிகழ்ந்தேறியுள்ளனவே! 82 எப்படியாய் அந்த பவுல் அப்போஸ்தலன், அவன் ஸ்தேவானுடைய மரணத்திற்கு சாட்சி பகர்ந்தபோது, அந்த மகத்தான அப்போஸ்தலன் தன்னுடைய தொல்லையான வேளையினூடாக இருந்து கொண்டிருந்தான்; ஸ்தேவானுடைய சிறிய முகம் பரலோகத்தை நோக்கியவாறு பார்க்க, அவனுடைய முகத்திலே கற்கள் எறியப்பட, அவனோ மேல் நோக்கிப் பார்த்து, “நான் வானங்கள் திறந்திருப்பதைக் காண்கிறேன். நான் இயேசுவானவர் தேவனுடைய வலதுபாரிசத்தில் நிற்கிறதைக் காண்கிறேன்” என்றுக் கூறுகிறதைப் பவுல் கண்டான். மேலும் ஸ்தேவான், “ஆண்டவரே, இவர்கள்மேல் இந்தப் பாவத்தை சுமத்தாதிரும்” என்று சொன்னான். அப்பொழுது பவுல் அந்த வஸ்திரங்களைப் பிடித்துக் கொண்டிருந்தான், அதுவோ அவனை அநேக வாரங்களாக சாம்பல் குவியலின் மேல் வைத்து, முன்னும் பின்னுமாக நடக்கச் செய்தது. அவனுடையச் சிந்தை மாசுபடுத்தப்பட்டு, தன்னுடைய துக்கத்தை மூழ்கடித்து மறக்க முயற்சிக்கும் ஓர் மனிதன் ஓர் மதுபான புட்டியுடன் செல்வதுபோல, சண்டையிட முயற்சிக்கும் ஓர் போக்கில் தமஸ்குவிற்கு செல்வதும் தன் பாதையில் இருந்தான். 83 அவன் அந்தப் பாதையின் தூரத்தில் பாதி மையத்தில் இருந்தான். அப்பொழுது அங்கே வானத்திலிருந்து ஒரு சத்தம் உண்டாகி, ஒரு மகத்தான ஒளி பிரகாசிக்க, “சவுலே, சவுலே, நீ ஏன் என்னை துன்பப்படுத்துகிறாய்?” என்று கேட்டது. அப்பொழுது அவன் அவரைக் கண்டான். அவர் உயிர்த்தெழுந்த இயேசுவாயிருந்தார் என்றும், அவர் மரித்துப்போயிருந்தார் என்பதைக் குறித்து அவன் சாட்சி பகர்ந்திருந்த ஒருவர் மீண்டும் உயிரோடு எழுபப்பட்டுவிட்டார் என்றும், அவரைக் குறித்து அவன் அடையாளங் கண்டு கொண்டான். 84 ஓ, என்னுடைய சொந்த ஜீவியத்தில், அழிவிற்குச் செல்லும் பாதையில் இருந்தபோது, நான், “நான் இயேசு, நான் மரித்தேன். ஆனாலும் நான் சதாகாலங்களிலும் உயிரோடிருக்கிறேன். நான் பிழைக்கிறபடியினால் நீங்களும் பிழைக்கிறீர்கள்” என்ற ஓர் இனிமையான சத்தத்தைக் கேட்டதை என்னால் நினைவுகூர முடிகிறது. அந்த நேரம் முதற்கொண்டு என்னுடைய கரத்தை அவருடையதில் வைத்து, நான் அந்த இருளான இடங்களினூடாக அவரையே நம்பியிருக்கிறேன். எந்த வழியில் நான் சென்று கொண்டிருக்கிறேன் என்பதை என்னால் காண முடியாத நேரங்கள் வரும்போது நான் இன்னமும் அவரையே நம்பியிருக்கிறேன். 85 ஒவ்வொரு கிறிஸ்தவனும் அந்தச் சோதனைகளுக்குள்ளாகத் தள்ளப்பட வேண்டியவனாயிருக்கிறான். ஒவ்வொரு கிறிஸ்தவனும் அந்தச் சாம்பல் குவியலின்மேல் வைக்கப்பட வேண்டியவனாயிருக்கிறான். அப்பொழுதே அவனால், “என் மீட்பர் உயிரோடிருக்கிறார் என்று நான் அறிந்திருக்கிறேன்” என்ற ஒரு அனுபவத்தோடு வெளியே வரமுடியும். 86 நாம் இக்காலையில் வெறுமனே இங்கு வந்து அமர்ந்து ஏதோ சரித்திரப்பிரகாரமான சம்பவத்தைக் குறித்துப் பேச வரவில்லை. அவை யாவுமே உண்மையாயிருக்கின்றன. ஆனால் நாமோ இங்கே இக்காலையில், “இயேசு கிறிஸ்து தேவனுடைய குமாரன் என்று நான் அறிந்திருக்கிறேன். நான் அதை எந்தச் சந்தேகத்தின் நிழலுக்கும் இடமின்றி அறிந்திருக்கிறேனே! அவர் மரித்தோரிலிருந்து எழுந்தார் என்றும், அவர் இன்றைக்கு எனக்குள்ளே ஜீவிக்கிறார் என்றும் நான் அறிந்திருக்கிறேன். அவர் என்னுடையவராயிருக்கிறார். நான் அவருடையவராயிருக்கிறேன். நான் அவரோடு தேவனுடைய இராஜ்ஜியத்தில் ஓர் உடன் சுதந்தரவாளியாயிருக்கிறேன்,” என்ற ஒரு சாட்சியோடு வந்திருக்கிறோம். 87 ஈஸ்டர்! ஈஸ்டர் ஒரு மகத்தான காரியத்தை ஓர் உயிர்த்தெழுதலை, ஒரு புதிய நம்பைக்கையைக் கொண்டு வருகிறது. நீங்கள் அதை இந்தக் காலையில் பெற்றுள்ளீர்களா? அது உங்களுடைய இருதயத்தில் உள்ளதா? உங்களுடைய மீட்பர் ஜீவிக்கிறார் என்றும், அவரே சகலத்தையும் நடப்பிக்கிறார் என்றும் நீங்கள் அறிந்திருக்கிறீர்களா? 88 நீங்களோ, “சகோதரன் பிரான்ஹாம் அவர்களே, நான் இங்கே ஜெப வரிசைக்காக உட்கார்ந்து காத்துக் கொண்டிருக்கிறேன்” என்று கூறலாம். 89 தேவன் அதைச் சரியாக அப்படியே நன்மைக்கேதுவாகவே கிரியைச் செய்து கொண்டிருக்கிறார். அன்றொரு நாள் ஏன் அந்த விலையேறப்பெற்ற சிறு பையன், அவன் பிறந்த போதே குருட்டுத்தனத்தினால் பாதிக்கப்பட்டிருந்தான்? அது தேவன் மகிமையை பெற்றுக்கொள்ளும்படியாகவும், ஒரு பட்டணத்தைக் கலக்கும்படியாகவுமேயாகும். நிச்சயமாகவே தேவன் என்ன செய்து கொண்டிருக்கிறார் என்பதை அவர் அறிந்திருக்கிறார். தேவன் அறிந்திருக்கிறார். அவர் தம்முடைய மகிமையை நமக்கு காண்பிக்கும்படியாகவே நம்மை சாம்பல் குவியலின் மீது வைக்கிறார். 90 ஆகையால் நண்பனே, இக்காலையில் நான் இதை கூறுகிறேன். முப்பத்தொரு வருட கால ஊழியத்திற்குப் பிறகு, முப்பத்தொரு வருட கால ஊழியக் களத்தின் உழைப்புக்களுக்கும் பிறகு நான் இதின்பேரிலான என்னுடைய சாட்சியைத் தோற்றுவிக்க விரும்புகிறேன். நான் ஏமாற்றங்களைக் கண்டிருக்கிறேன். நான் வேண்டியிருக்கிறக் காரியங்களுக்கான கால அளவைப் பார்த்திருக்கிறேன். அந்தக் காரியங்களுக்காகக் கதறியிருக்கிறேன். அந்தக் காரியங்களுக்காக மன்றாடியிருக்கிறேன். அவைகளைப் பெற்றுக்கொள்ள தவறிப்போயிருக்கிறேன். ஆனால் நான் அப்படியே தேவன்பேரில் பொறுமையாகக் காத்திருப்பேனேயானால், அப்பொழுது அது முற்றிலும் சரியாக கிரியை செய்கிறதையும், அது முற்றிலும் சரியாக வருகிறதையும், அது முற்றிலும் சரியாகக் காரியத்தைச் செய்கிறது என்பதையும் நான் அறிந்து கொள்வேன். 91 நான் என் குழந்தையை, என்னுடைய குட்டி சாரோனை இழந்துவிட்டபோது, அந்த ஒரு காரியமே என்னை…தடுமாறச் செய்தது. அப்பொழுது நான், “அது எப்படி நன்மையானதாக இருக்கமுடியும்? அது எப்படி நன்மையானதாக இருக்க முடியும்?” என்றேன். ஆனால் சில மாதங்கள் கழித்தோ நான் உடைந்து போன அந்தப் பழைய சாமான் வண்டியின் பக்கத்தில் நின்று கொண்டிருக்க, அங்கே முற்றிலும் அழகான ஒரு வாலிபப் பெண்ணாக நின்று, அவள் என்னிடத்தில் பேசுவதைக் கண்டேன். அப்பொழுது அவள் உயிரோடிருந்தால் அவன் தவறாகப் போயிருந்திருக்கலாம் என்பதை நான் அறிந்து கொண்டேன். எனவே அவள் இளமையாயும், இனிமையாயுமிருந்தபோதே தேவன் அவளை எடுத்துக் கொள்ள வேண்டியிருந்தது. நான் அவளை மீண்டும் காண்பேன் என்பதை அறிவேன். நான் அவளைக் காண்பேன் என்பதை அறிவேன். நான் அதை எந்தச் சந்தேகத்தின் நிழலுக்கு இடமின்றி அறிந்துள்ளேன். 92 இருபத்திரண்டு வயதுடைய என்னுடைய மனைவி, வெறுமனே ஒரு பெண்ணாய், அங்கே ஒரு சிறு தாயாய் எடுக்கப்பட்டதைக் குறித்து நான் எண்ணிப் பார்க்கிறேன். இங்கே செய்தித் தாள்களில், “ஒரு வாலிபத்தாயார், சங்கை…வெறுமனே மரிக்கிறாள்” என்பதை ஒரு தலைப்ப்புச் செய்தியாக அறிவித்தபோது, ஓ, என்னுடைய இதயம் எப்படியாய் இரத்தம் கசிந்தது. அப்பொழுது என்ன செய்வதென்றே எனக்குத் தெரியவில்லை. 93 ஆனால் இன்றைக்கோ அவையாயும் என்னுடைய நன்மைக்கேதுவாய் நடைபெற்றுக் கொண்டிருந்தது என்பதை நான் அறிந்திருக்கிறேன். ஜீவியத்திற்குள்ளாக என்ன இருந்தது என்பதை வெளியே கொண்டு வரும்படியாக அது வேதனையால் திருகி நெளிக்கப்பட்டு, கசக்கிப் பிழியப்பட்டு, நம்பிக்கையில் உறுதிபடச் செய்ய வேண்டியதாயிருந்தது என்பதை நான் அறிந்திருக்கிறேன். தேவனே தம்மை வெளிப்படுத்துவதற்கு முன்பு கசக்கி பிழியப்பட வேண்டியதாயிருந்தபடியால், அது பிரான்ஹாமுக்கு அங்கே உள்ளே மிகையான காரியமாயிருந்தது. 94 தேவன் சோதனைகளினூடாக அதை வெளியே பிழிந்தெடுக்க வேண்டியதாயிருக்கும் வரை அது உங்களுக்குள்ளே உங்களைக் குறித்து மிகையானதாயிருந்தது. அந்தச் கசக்கிப் பிழிதல் நடந்து கொண்டிருக்கும்போது அது கடினமாயிருக்கிறது. ஆனால் கொஞ்சகழித்தோ ஆகாயம் மீண்டும் தெளிவாகும், அப்பொழுது நீங்கள் தேவனுடைய தீர்மானத்தைக் காண்கிறீர்கள். அதன்பின்னர், நீங்கள், “என் மீட்பர் உயிரோடிருக்கிறார் என்றும், அவர் கடைசிநாளில் பூமியின்மேல் நிற்பார் என்றும் நான் அறிந்திருக்கிறேன். இந்த என் தோல்முதலானவை அழுகிப் போனபின்பு, நான் என் மாம்சத்தில் இருந்து தேவனைப் பார்ப்பேன்” என்று கதறி கூக்குரலிடுவீர்கள். இந்தச் சிறிய சோதனைகளும் மற்றக் காரியங்களும் வெறுமனே சற்று நேரத்திற்கானதாய் உள்ளன. அவைகள் மங்கிப்போய் மறைந்து ஒழிந்துபோகும். ஆனால் அவைகள் உங்களுடைய நன்மைக்காக மாத்திரமே செயல்படுத்தப்படுகின்றன. எனவே அது தேவன் மகிமையைப் பெற்றுக்கொள்ளவே என்பதை நாம் நினைவுகூருவோமாக. 95 நாம் சற்று நேரம் நம்முடைய தலைகளை அப்படியே வணங்குவோமாக. நாம் முடிப்பதற்கு முன்பாக, ஜெபத்தில் நினைவுகூரப்பட வேண்டுமென்று விரும்புகிற எவரேனும் இங்கிருக்கிறார்களா என்று நான் ஜெபிப்பதற்கு முன்பு கேட்டுக் கொள்ள விரும்புகிறேன். தேவன் உங்களை ஆசீர்வதிப்பாராக. இங்குள்ள எத்தனைப் பேர், “நான் மீண்டும் புதியதாய் வெளிவரும்படியாக, எனக்கு ஓர் புதிய அனுபவத்தை தரும்படிக்கு, இப்பொழுது என்னுடைய சோதனை நேரத்தில் தேவன் எனக்கு வேண்டும்” என்று கூற விரும்புகிறீர்கள்? அப்படியானால் உங்களுடைய கரத்தை உயர்த்தி, “இது எனக்கான ஓர் உயிர்த்தெழுதலாய், ஓர் ஈஸ்டராய் இருக்க வேண்டும் என்று நான் விரும்புகிறேன். என்னைப் புதிய நம்பிக்கைகளிலும், புதிய வல்லமைகளிலும், புதிய ஆரோக்கியத்திலும், புதிய சந்தோஷத்திலும் உயிர்த்தெழுச் செய்யும்படிக்கே நான் விரும்புகிறேன்” என்று கூறுங்கள். என்னுடைய அருமையான ஜனங்களே, தேவன் உங்களை ஆசீர்வதிப்பாராக. 96 ஓ, எங்கள் தேவனே, எங்கள் இரட்சகரே, இந்த ஈஸ்டரானது என்ன பொருள்படுகிறது என்பதினை எங்களுடைய இருதயங்களுக்கு சுட்டிக்காட்டுகிறதற்காக நாங்கள் உமக்கு இந்த ஈஸ்டருக்காக மிகவும் நன்றியுள்ளவர்களாயிருக்கிறோம். விசுவாசத்தினால் அப்பால் உள்ள தேசத்தில் கர்த்தராகிய இயேசுவானவர் தம்முடைய இராஜாங்கத்திற்குரிய வஸ்திரங்களை தரித்துக் கொண்டு, இப்பொழுதே அவர் தம்மை ஆயத்தப்படுத்திக் கொண்டிருக்கிற காரணத்தால், அவருடைய வருகையை எங்களால் காணமுடிகிறது. மணவாளன் சபையின் மீது கலியாண வஸ்திர அங்கியைத் தரிப்பிக்க, அவளோ, அதை தரித்துக்கொண்டிருக்கிறாள். வெகு சீக்கிரத்தில் ஒரு மகத்தான சந்திப்பு உண்டாகும்படி ஆயத்தமாகிக் கொண்டிருக்கிறது. 97 இந்தச் சாம்பல் குவியலானது என்றென்றைக்குமாய் நிற்க முடியாது. கர்த்தாவே, ஜனங்கள் எள்ளி நகையாடுவதையும், எங்களைக் குறித்து பரிகசிப்பதையும், எங்களை, “பரிசுத்த் உருளைகள்” என்ற இழிவான பெயரைக் கொண்டு அழைப்பதையும், எங்களைக் குறித்து பரியாசம் செய்வதையும், நாங்கள் மனநிலைச் சரியில்லாதவர்களாயும்கூட இருக்கிறோம் என்று கூறுவதையும் நாங்கள் கேட்டுக்கொண்டிருக்கும்போது, ஓ, அது எல்லா நேரங்களிலும் அவ்வாறு நீடித்து நிலைத்திருக்க முடியாதே. ஆனால் நாங்கள் யோபுவைப் போல எங்களுடைய சாட்சியை உறுதியாக பற்றிக்கொண்டிருப்போமாக. நாங்கள் சிங்கங்களின் கெபியில் தானியேல் இருந்ததுபோல அல்லது அக்கினி சூளையில் எபிரெயப் பிள்ளைகள் இருந்தது போல அல்லது ஆபிரகாம் தன்னுடைய பயணத்தில் இருந்ததுபோல இருப்போமாக. 98 ஓ, கர்த்தாவே, “எக்காளம் தொனிக்கும்போது, கிறிஸ்துவுக்குள் மரித்தவர்கள் எழும்புவார்கள், பின்பு உயிரோடிருக்கிற நாங்களும் ஒரு நிமிஷத்திலே, ஓர் இமைப்பொழுதிலே மறுரூபமாக்கப்படுவோம்” என்ற அந்த மகத்தான காரியம் சம்பவிக்கிறதை காணும் வரைக்கும் உண்மையாய் நிற்கும்படிக்கு எங்களுக்கு உதவி செய்யும். அப்பொழுது, “நான் பிழைக்கிறபடியினால் நீங்கள் பிழைக்கிறீர்கள்” என்று கூறி, ஆயிரத்து தொள்ளாயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் இந்தக்காலையில் கிறிஸ்துவானவர் களிகூர்ந்த எங்களுக்கான அந்த ஈஸ்டர் தோன்றும். 99 “எங்கள் மத்தியிலிருந்து எடுத்துக் கொள்ளப்பட்ட இந்த மாறாத இயேசுவானவர், அவர் சென்ற விதமாகவே திரும்பவும் வருவார்”. நாங்கள் அவரை அவருடைய கரத்தில் உள்ள ஒவ்வொரு வடுவோடும், அவருடைய தலையில் ஒவ்வொரு முள்ளும் பதிந்த அச்சு அடையாளத்துடன்கூட காண்போம். நாங்கள் அவரைக் காண்போம். ஓ, நான் அவரை அறிந்து கொள்வேன், நான் அவரை அறிந்து கொள்வேன். மீட்கப்பட்டு அவருக்கு பக்கத்தில் நான் நிற்பேன். 100 ஆம், கர்த்தாவே, என்னுடைய அற்பமான இருதயமும், இந்தப் பலவீனமான என்னுடைய சரீரமும் கவலைகளாலும் மற்றும் அறுவடை களத்தின் உழைப்புகளாலும், ஊழியக் களங்கள், இன்ப துன்பங்கள் மற்றும் கர்வமுள்ள ஊழியர்களிடையே காணப்படுகின்ற அக்கறையற்றத் தன்மைகள் போன்றவைகளாலும், இடத்திற்கு இடம் ஜனங்களுடைய இகழ்ச்சி மற்றும் பொல்லாத சக்திகள் போன்றவைகளின் பாரத்தால் கீழே வளையத் துவங்குகிறது. ஆனால், ஓ கர்த்தாவே, என்றோ ஒரு நாள், நாங்கள் எலியாவைப் போல ஆற்றண்டைக்கு வந்து அங்கே நோக்கிப் பார்க்க, எங்களைத் தூக்கிச் செல்லும் ஓர் அக்கினி இரதமானது ஒவ்வொரு புதரண்டையிலும் சேணம் பூட்டப்பட்டிருக்கும். எனவே இந்தச் சாம்பல் குவியல்களோ முன்வைக்கப்பட்டுள்ள அந்த மகத்தான காரியங்களிலிருந்தும், அந்த மகத்தான மகிமையிலிருந்தும் எங்களை மறைக்கும்படியான திரைகளாய் மாத்திரமே உள்ளன என்பதை நாங்கள் அறிந்து கொள்வோமாக. 101 நாங்கள் அவரை முகமுகாமாய் காணும் வரையில் யோபுவைப்போல உண்மையாய் நிலைத்திருப்போமாக. நாங்கள் எங்களுடைய கர்த்தர் அவ்வளவு உண்மையாய் இருந்ததுபோல, கல்வாரிக்குப் போகும்படியான எங்களுடைய மாதிரியாயிருந்தது போலவே இருப்போமாக. எங்களுடைய ஜீவியத்தில் ஓர் உயிர்த்தெழுதல் உண்டாகும்படியாக, நாங்கள் சிலுவையிலறையப்படவுங்கூட, அவரோடுகூட சிலுவையில் அறையப்படவுங்கூட ஆயத்தாமாயிருப்போமாக. இதை அருளும், கர்த்தாவே. 102 இங்கே பண்டைய பவுல் இருந்ததைப் போன்று, வெறுத்தொதுக்குபவர்களாய், இகழ்ந்து நகையாடியிருக்கிறவர்களாய் எவரேனும் இருப்பார்களாயின், அவர்கள் இந்தக் காலையில் வீட்டிற்குத் திரும்பும் தங்களுடையப் பாதையில் ஈஸ்டரைக் கண்டடைவார்களாக. இதை அருளும், கர்த்தாவே. 103 கர்த்தாவே, அழிவின் சாம்பல் குவியலின் மேல் இருக்கிறவர்களுக்கும், சுகவீனத்தின் சாம்பல் குவியலில் இருக்கிறவர்களுக்கும், இது அவர்கள் விடுவிக்கப்படும் வேளையாய் இருக்க வேண்டும் என்றே நாங்கள் ஜெபிக்கிறோம். 104 கடந்த இரவு உந்துகலகம் இழுக்கும் குடியிருப்பு வண்டியில் இருந்த அந்தச் சிறிய பெண்மணியினிடத்திலும், அவளுடைய கணவனிடத்திலும் பேசிக் கொண்டிருந்தோம். எப்படியாய் அதோ அந்த பீனிக்ஸ்ஸில் ஓர் ஆபத்தான நிலையில் அங்கே அவர்கள் மேல் அந்தப் பெரிய புற்று நோயானது பரவியிருந்தது. ஆனால் இன்றைக்கு இப்பொழுதோ அவர்கள் பரிபூரண ஆரோக்கியத்துடன் இயல்பான நிலையிலும் இருக்கின்றார்களே. அந்த சிறு குழந்தையினுடைய இருதய அறுவை சிகிச்சை செய்யப்பட வேண்டியதாயிருந்தது. ஆனால் அது இக்காலையில் இங்கே கட்டிடத்தில் இயல்பான நிலையில் சுகத்தோடு உட்கார்ந்துள்ளது. ஒருபோதும் பகல் வெளிச்சத்தையேக் காணாமல் ஒருகாலத்தில் இருளில் நடந்து வந்த ஒரு சிறு குருட்டுப்பையன் இன்றைக்கு நடந்து பகல் வெளிச்சத்தைக் காண்கிறானே. ஓ, தேவனே நாங்கள் இதற்காக உமக்கு எவ்வளவாய் நன்றி கூறுகிறோம். இவை யாவுமே அந்த மகத்தான உயிர்த்தெழுதலின் நாளுக்கான திரைக்கு அப்பாலே காணப்படுகின்றன. பிதாவே இதை அருளும். இந்தக் காரியங்கள் அந்தவிதமாக இருக்க வேண்டியதாயிருந்தன என்பதையும், அந்தக் குருடான சிறு பையனால் காணமுடிந்ததையும், அந்தச் சிறுக் குழந்தைக்கு இருந்த அந்த இருதயக் கோளாறு மற்றவர்களுக்கு ஒரு சாட்சி கூறும்படியாயிருக்கிறது என்பதையும் அவர்கள் அறிந்து கொள்வார்களாக. உம்மிடத்தில் அன்பு கூறுகிறவர்களுக்கு சகலமும் நன்மைக்கு ஏதுவாக நடக்கிறது. 105 சோதனையில் கீழ்ப்படிந்த ஒருவர் இருந்த காரணத்தினால் பரிசோதனையில் நின்ற ஒருவர் இருந்த காரணத்தால் சகலமும் நமக்கு சாத்தியமாயிற்று. அந்த ஒருவர் இயேசுவாக இருந்தது. பிதாவானவர் அவரை ஈஸ்டர் காலையில் எழும்புமளவிற்கு பிதாவிற்கு அவ்வளவாய்க் கீழ்ப்படிந்த ஒருவராயிருந்தார். ஏனென்றால் அவர் மரணத்தினால் கட்டப்பட்டிருக்க முடியாதிருந்தது. “என்னுடைய பரிசுத்தவானை அழிவைக்காண வொட்டீர்; என் ஆத்துமாவை பாதாளத்தில் விடீர்”. ஏனென்றால் அவர் எப்பொழுதும் பிதாவானவருக்கு பிரியமாயிருந்ததையே செய்துகொண்டு உண்மையுள்ளவராய் கண்டறியப்பட்டார். 106 தேவனே நாங்கள் எப்போதும் கடமையின் பாதையில் உண்மையுள்ளவர்களாயிருப்போமாக. எங்களுடைய சோதனைகள் என்னவாயிருந்தாலும், எங்களுடையத் தொல்லைகள் என்னவாயிருந்தாலும் கவலைப்படாமல், என்னவாயிருந்தாலும் சரி, நாங்கள் எப்பொழுதும், “தேவனிடத்தில் அன்புகூறுகிறவர்களுக்குச் சகலமும் நன்மைக்கு ஏதுவாய் நடக்கிறது என்று நான் அறிந்திருக்கிறேன்” என்று கூறக்கூடியவர்களாய் இருப்போமாக. பிதாவே, இதை அருளும். 107 நாங்கள் இந்தக்காலையில் உம்முடைய ஆசீர்வாதங்களினால் இந்த ஜனங்களை ஆசீர்வதிக்கிறோம். அவர்கள் தங்களுடைய இடங்களிலிருந்து அதிகாலையிலேயே வந்துவிட்டனர். அவர்கள் கூடாரத்திற்கு வந்திருக்கிறார்கள். அவர்கள் ஆறுதலைப் பெற வந்திருக்கிறார்கள். அவர்கள் இக்காலையில் வீட்டிற்குச் செல்கையில், எம்மாவூரிலிருந்து வந்தவர்கள், “வழியிலே அவர் நம்முடனே பேசினபோது, நம்முடைய இருதயம் நமக்குள்ளே கொழுந்துவிட்டு எரியவில்லையா?” என்று கூறினதுபோல, அவர்களுடைய இருதயங்களில் பரிசுத்த ஆவியின் வல்லமை கொழுந்துவிட்டு எரிந்துகொண்டிருப்பதோடு வழி நெடுக நடந்து செல்வார்களாக. பிதாவே, இதை அருளும். நான் அவர்களைக் கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் இப்பொழுதே உம்மண்டை ஒப்புவிக்கிறேன். ஆமென். சரி, சகோதரன் நெவில். இப்பொழுது ஆராதனைகளை நினைவில் வைத்துக் கொள்ளுங்கள். 108 நாம் இக்காலையில் ஜெப அட்டைகளை வைத்துக் கொள்ள மாட்டோம். அதற்குக் காரணம், நாம் ஜெப அட்டைகளை உடையவர்களாயிருந்தால், நான் இந்தவிதமாக இங்கே ஜனங்களை நிற்க வைத்துக் கொண்டிருக்கும் வரையில், நான் அந்த வரத்தினை அப்படியே நம்பிக்கைக் கொண்டு சார்வுற்றிருப்பேன். நான் அந்த நிலையை அடையும் வரையில் நான் ஓர் இடத்தை உடையவனாயிருக்க ஏற்பாடு செய்து கொள்ள வேண்டும். அப்பொழுதுதான் என்னால் இங்கிருந்து நடந்து செல்ல முடியும் மற்றும்…நான் பயப்படுகிறேன். எனக்கு ஒரு பயமுண்டாவதுபோன்று தென்படுகிறது. நான் ஒரு தவறு செய்துவிடுவேனோ என்று பயப்படுகிறேன். ஓர் சிறு சண்டையில் தோல்வியுறுவது ஓர் பெரிய யுத்தத்தில் தோற்பதல்ல. பேட்டன் அவர்கள் அநேக சிறு சண்டைகளில் தோற்றுப்போனார். ஆனாலும் அவர் ஒருபோதும் ஓர் பெரிய யுத்தத்தில் தோற்றதேயில்லை. அது உண்மை. நாமும்கூட அனேகச் சிறு சண்டைகளில் தோல்வியுறலாம். ஆனால் நாம் அந்தப் பெரிய யுத்தத்தில் தோல்வியுறவேமாட்டோம். நான் அனேகத் தவறுகளைச் செய்வேன், ஆனால் நான் அந்த இலக்கில் தோல்வியுறமாட்டேன். தேவன் அதை அளித்தார். எனவே தேவன் அதைக் குறித்து கவனித்துப் பேணுவார். இது—இது அபிஷேகமாயிருக்கிறது. இப்பொழுது இதுவே நேரமாயுள்ளது. இதுவே அந்த வேளை என்று நான் நம்புகிறேன். இந்த நாளில் இது ஈஸ்டராயிருக்கிறபடியால் நான் துவங்கிக் கொண்டிருக்கிறேன், நான் அங்கே வியாதியஸ்தருக்காக ஜெபித்தது போன்றே, நான் நெடுக ஜெபிக்கப் போகிறேன். என்னால் முடிந்தால்…இது அபிஷேகமாயுள்ளது. அது எனக்குள்ளாக ஏதோ ஒரு காரியம் சம்பவிக்க வேண்டியதாயிருக்கிறது. எனக்கும் இது பழக்கப்பட்டதல்ல. அது அப்பேற்பட்ட ஒரு வழியில் உண்டாகிறது. நான் அதை ஒருக்கால் சரியாகக் கண்டுபிடிக்க முடியாதவனாயிருக்கலாம். ஆனால் நான் ஒவ்வொரு முறையும் அதை அறிந்து கொள்ளும் வரையில் நான் அதனண்டை அப்படியே தொடர்ந்து சென்று கொண்டே இருக்க வேண்டும். ஆகையால் தேவனுடையக் கிருபையினால் நான் முயற்சிக்கும் நாளாய் இது இருக்கும். 109 இப்பொழுது கர்த்தர் உங்களை ஆசீர்வதிப்பாராக. சகோதரன் நெவில். ஆராதனைகள் ஒன்பது—முப்பத்திற்குத் துவங்கும். சகோதரன் நெவில்.